Madurai Shocker: கஞ்சா குடிக்கிகளின் போதை வெறியால் துள்ளத்துடிக்க கொல்லப்பட்ட அப்பாவி; ஒருதலைக்காதல் விபரீதத்தால் சோகம்.!
Accuse Muthalagan | Crime File Pic (Photo Credit: Facebook / Pixabay)

அக்டோபர் 26, மதுரை (Madurai Crime News): மதுரை மாவட்டத்தில் உள்ள யோகானந்தஸ்வாமி தெற்கு தெருவில் வசித்து வருபவர் பொன்குடி மாயாண்டி. இவரின் மனைவி பாண்டியம்மாள். தம்பதிகள் சம்பவத்தன்று மதிய நேரத்தில் தங்களின் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது, அரிவாளுடன் வீட்டிற்குள் வந்த இளைஞர் ஒருவர், மாயாண்டியை சரமாரியாக வெட்டிச்சாய்த்து கொலை செய்தார்.

அவருக்கு பின்னால் சில நொடிகள் கழித்து வந்த இளைஞர், "ஆளை மாற்றிவிட்டாயே?.. என்றபடி, யாராக இருந்தாலும் வெட்டு" என கூறியவாறு கொலை செய்து இருவரும் தப்பி சென்றனர். கணவர் கொலை செய்யப்பட்டதை கண்டு அதிர்ந்துபோன மனைவி பாண்டியம்மாள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலை அறிந்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மாயாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்த விசாரணையில், சம்பந்தமே இல்லாத அப்பாவியை கொலை செய்தது உறுதியானது. அங்கிருந்த சிசிடிவி கேமிராவும் ஆய்வு செய்யப்பட்டது. Rajasthan Shocker: நிலத்தகராறில் இளைஞரின் மீது டிராக்டர் ஏற்றி கொடூர கொலை; நெஞ்சை பதறவைக்கும் வீடியோ உள்ளே.!

விசாரணையை தொடர்ந்து மதுரை எச்.எம்.எஸ் காலனியை சேர்ந்த முத்தழகன் (வயது 19), முத்தழகனின் நண்பர் 17 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல் காத்திருந்தது.

அதாவது, மாயாண்டியின் பக்கத்து வீட்டில் வசித்துவந்த இளம்பெண், ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அவரை ஒருதலையாக காதலித்து, காதல் தொல்லை கொடுத்து வந்த முத்தழகனின் செயல்பாடுகளை பெண்மணி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

முத்தழகனும், 17 வயது சிறுவனும் இருசக்கர வாகனத்தில் வந்து இளம்பெண்ணிடம் காதல் தொல்லையில் ஈடுபட, விஷயம் பெண்ணின் தந்தைக்கு சென்றதால் அவர் தனது உறவுக்கார இளைஞருடன் சேர்த்து முத்தழகனை இடைமறித்து வாகனத்தை பறித்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். NCERT Recommends Replacing India With Bharat: இந்தியாவை பாரதமாக மாற்ற பரிந்துரை; தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அதிரடி..! 

தனது கூட்டாளியின் முன்பு அவமானப்பட்டதாக நினைத்த முத்தழகன், கஞ்சா மற்றும் மதுபானத்தை அருந்திவிட்டு போதையில் இளம்பெண்ணின் வீட்டிற்கு 17 வயது சிறுவனுடன் வருகை தந்துள்ளார். அங்கு இளம்பெண்ணின் தந்தை இருந்தால் கொலை செய்துவர சிறுவன் அனுப்பி வைக்கப்பட்டான்.

சிறுவன் போதையில் இவ்விவகாரத்தில் சம்பந்தம் இல்லாத மாயாண்டியை பார்த்து, அவரை வெட்டி கொலை செய்துள்ளார். அலறல் சத்தம் கேட்டதும் இளம்பெண்ணின் தந்தை மரணம் அடைவதை நேரில் பார்க்க வந்த முத்தழகனும், ஆள் மாறிப்போனது உறுதியாகி கொலையை தடுக்காமல், "யாராக இருந்தாலும் வெட்டு" என வசனம் பேசி கொலையை அரங்கேற்றி இருக்கிறார். பின் இருவரும் தப்பி சென்றுள்ளனர்.

குற்றவாளிகளின் கைதுக்கு பின்னர் மேற்கூறிய தகவலை அறிந்த அதிகாரிகள், 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், முத்தழகனை சிறையிலும் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.