Judge Andrew Wilkinson (Photo Credit: Twitter)

அக்டோபர் 20, மேரிலேண்ட் (World News): அமெரிக்காவில் அதிகரித்து காணப்படும் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த, அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், அதனை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வருவதில் தொடர் சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இதனால் ஏற்படும் தாக்குதல்களில் அவ்வப்போது அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். சிலநேரம் போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடத்தும் தாக்குதல் காரணமாகவும் மக்கள் பரிதாபமாக பலியாகி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் நீதிபதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலையை erpaduthiullana. அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட் (Maryland) மாகாணத்தில் நீதிபதியாக வேலை பார்த்து வருபவர் ஆண்ட்ரீவ் வில்கின்சன் (Judge Andrew Wilkinson). Mumbai Pocso Court Judgement: 16 வயது சிறுமி பலாத்காரம்; 21 வயது குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு.! 

இவர் நேற்று Hagerstown நகரில் இருக்கும் தனது வீட்டில் இருந்த நிலையில், மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து நீதிபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், மாநில பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். நீதிபதி சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபருக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர். குற்றவாளி கைது செய்யப்பட்ட பின்னரே, அவரின் கொலைக்கான காரணம் தெரியவரும் என மேரிலேண்ட் மாகாண காவல்துறை அதிகாரிகள் தெரிவிகின்றன.