அக்டோபர் 20, முமபை (Maharashtra News): மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, போக்ஸோ நீதிமன்றம் 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், 21 வயது இளம் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளித்துள்ளது. மேலும், குற்றவாளிக்கு எதிராக தனது கடுமையான வாதத்தையும் நீதிபதிகள் முன்வைத்தனர்.
கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி, தனது பாட்டியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து வீட்டிற்கு புறப்படுவதாக சென்ற சிறுமி, இரவு முழுவதும் வீட்டிற்கு வரவில்லை. மறுநாள் காலையில் அவர் வீட்டிற்கு வருகை தந்தார்.
அவரிடம் பெற்றோர் விசாரித்தபோது, அழுதபடி தனக்கு நடந்ததை கூறி கதறியழுதார். அதாவது, 16 வயது சிறுமி தனது பாட்டியின் வீட்டில் இருந்து வெளியே வந்த நிலையில், வழியில் அப்பகுதியை சேர்ந்த இளைஞன் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சிறுமியை கடத்தி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளான். Nagapattinam Accident: நாகப்பட்டினத்தில் நடந்த பயங்கரம்; அதிவேகத்தில் பயணித்த 3 சிறார்கள் விபத்தில் துள்ளத்துடிக்க பலி.!
கயவனின் வீட்டில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை கேட்டு அதிர்ந்துபோன குடும்பத்தினர், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, குற்றவாளியை கைது செய்தனர்.
அவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இவ்வழக்கு விசாரணை போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று நீதிபதி எஸ்.எம் தாக்கலிகர் தலைமையிலான அமர்வு நீதிபதிகள் தங்களின் தீர்ப்பை வழங்கினர். தீர்ப்புக்கு முன்பு விசாரணையில் குற்றவாளி தரப்பு, சிறுமியின் தரப்பு பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட நபர் சிறுமிக்கு முத்தம் மட்டுமே கொடுத்தார். அவர் எவ்வித பலாத்கார செயலிலும் எடுபடவில்லை என வாதமிட்டனர். இதனை குறித்துக்கொண்டு நீதிபதிகள், தீர்ப்பின்போது "எந்தவொரு இந்திய பெண்ணும் தனக்கு நேராத கொடுமை குறித்து பொய்சொல்ல மாட்டார்கள்.
திருமணம் ஆகாத பெண்கள், சிறுமிகள் இவ்விவகாரத்தில் பொய்களை கூறுவது அவர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகையால் பொய்யான கூற்றுகளை பெண்கள் கூறுவதில்லை. பாதிக்கப்பட்ட சிறுமியும் - குற்றவாளியும் காதல் வயப்பட்டு இருந்தாலும், அது இருவரும் பாலியல் உறவு மேற்கொள்வதற்கான அனுமதியை தருவதில்லை" என தெரிவித்தனர்.