50 Times Stabbed With Hammer: 50 முறை சுத்தியலால் தாக்கி இந்திய மாணவர் கொடூர கொலை; அமெரிக்காவில் பகீர் சம்பவம்.!
பார்க்கவே பதறவைக்கும் வகையில் அமெரிக்காவில் இந்தியருக்கு நடந்த மரணம் தொடர்பான காணொளி வெளியாகி அதிர்ச்சியை தந்துள்ளது.
ஜனவரி 29, ஜியார்ஜியா (World News): அமெரிக்காவில் உள்ள ஜியார்ஜியா மாகாணத்தில் தங்கி இருந்தவாறு எம்பிஏ படித்து வருபவர் விவேக் ஷைனி (வயது 25). இவர் அங்குள்ள லோஹியானா கிளே லேண்ட் சாலை பகுதியில் உள்ள சேஃரன் ஃபுட் மார்ட்டில் பகுதி நேர ஊழியராகவும் வேலை பார்த்து வருகிறார்.
53 வயது நபரின் அதிர்ச்சி செயல்: கடந்த ஜனவரி 18 ஆம் தேதி இவர் கடையில் வேலை பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். அச்சமயம் வருகை தந்த 53 வயதுடைய ஜூலியன் என்ற நபரால் 50 முறை சுத்தியலால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், இவர் கொலை செய்யப்படும் பதைபதைப்பு காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகி இருக்கிறது. Wife Bites Husband's Private Part: இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு வற்புறுத்திய கணவன்; அந்தரங்க உறுப்பை கடித்து கபளீகரம் செய்த மனைவி.!
எச்சரித்ததால் நடந்த பயங்கரம்: வீடு இல்லாத நபராக வந்த 53 வயது நபர், முதலில் அங்கு வந்து பொருட்களை வாங்கிவிட்டு பின் அங்கிருந்து செல்லாமல் இருந்துள்ளார். அவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஊழியர்கள், முதியவரை அங்கிருந்து செல்லக்கூறி எச்சரித்தனர். மேலும், காவல் துறையினரை அழைப்பதாகவும் கண்டித்து இருக்கின்றனர்.
50 முறை சுத்தியால் தாக்கி கொடூரம்: இரவு நேரமாகியும் அவர் அங்கேயே இருந்ததால், ஷைனி ஜூலியனை அங்கிருந்து வெளியேற கூறியுள்ளார். அவர் ஆத்திரத்தில் சுத்தியலை எடுத்து வந்து ஷைனியின் மீது 50 முறை சரமாரியாக தாக்குதல் நடத்தி கொலை செய்தார். இந்த அதிர்ச்சி சம்பவம் அங்கிருந்த கேமிராவில் பதிவாகி இருக்கிறது. தற்போது கொலையின் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
25-year-old Vivek Saini was attacked with a hammer by a homeless man at the Chevron Food Mart at Snapfinger and Cleveland Road in Lithonia late Monday night. #Homeless #usa #indian #internationalstudents pic.twitter.com/Cy2gL1tytH
— Gurpreet Kohja (@KhuttanGuru) January 22, 2024
(The above story first appeared on LatestLY on Jan 29, 2024 12:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

