US President Donald Trump: பயணிகள் விமானம் மோதி விபத்து.. ஒபாமாவும், ஜோ பைடனுமே காரணம் – அதிபர் டிரம்ப்.!
அமெரிக்கா விமான விபத்திற்கு ஒபாமாவும், ஜோ பைடனுமே காரணம் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜனவரி 31, வாஷிங்க்டன் டிசி (World News): அமெரிக்காவில் உள்ள வாஷிங்க்டன் மாகாணம், போட்டோமேக் நதிக்கரையில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டு விபத்தில் சிக்கின. இலகுரக பயணிகள் விமானம் ஒன்று, வேறொரு விமானத்துடன் நடுவானில் மோதி ஆற்றுக்குள் விழுந்துள்ளது. நடுவானில் நடந்த இந்த சம்பவத்தால், ரேகான் விமான நிலையம் (Reagan National Airport) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், தகவல் அறிந்து சென்ற மீட்பு படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேற்படி களநிலவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த விபத்தில் சிக்கி 67 பேர் உயிரிழந்துள்ளனர். Lay's Potato Chip: லேஸ் சிப்ஸ் சாப்பிடுவதால் உடலில் வரும் பிரச்சனைகள் என்ன? தெரிஞ்சிக்கோங்க மக்களே..!
அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டு:
இந்த நிலையில், விமான விபத்து குறித்து வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “ஒபாமாவும் பைடனும் குடிமக்களின் பாதுகாப்புக்கு பதிலாக இடதுசாரி பன்முகத்தன்மை கொள்கைக்கு முன்னுரிமை அளித்தனர். இதனால் விமானப் போக்குவரத்துத் துறையில் இருந்த திறமையான ஊழியர்களை வெளியேற்றினர். 2016இல் நான் அதிபரானபோது விமானப் போக்குவரத்தின் தரத்தை அசாதாரணம் கொண்டதாக மாற்றினேன். ஆனால், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு முன்பைவிட தரம் குறைவானதாக விமானத் துறையை மாற்றினார். விபத்தில் சிக்கிய யாரும் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. அவர்களின் குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
(The above story first appeared on LatestLY on Jan 31, 2025 06:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

