செப்டம்பர் 13, வியட்நாம் (World News): வியட்நாம் நாட்டில் உள்ள தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது ஹனோய் மாவட்டம். இம்மாவட்டத்தின் தலைநகரில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்கின்றன.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு 11:30 மணியளவில் 45 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து ஏற்பட்ட இடம் குறுகலான பகுதி என்பதால், மீட்பு படையினர் போதுமான அளவு விரைந்து பணிகளை துரிதமாக மேற்கொள்ள இயலவில்லை. Bus Trailer Collision: கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரம்; தனியார் பேருந்தின் மீது கண்டைனர் லாரி மோதி கோர விபத்து.. 11 பேர் பலி., 13 பேர் படுகாயம்.!
10 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் இருந்த மக்களை, அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் தீயில் கருகி 50 பேர் பரிதாபமாக பலியாகி இருக்கின்றனர். 54 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டனர்.
70 பேர் பத்திரமாகவும் மீட்கப்பட்டுள்ளார். இந்த தீ விபத்திற்கான காரணம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வியட்நாமை பொறுத்தமட்டில் அவ்வப்போது தங்கும்விடுதிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் தீ விபத்து நடப்பது தொடர்கதையாகியுள்ளது.
JUST IN: "Dozens" killed in apartment building fire in Hanoi, Vietnam, according to state media pic.twitter.com/uv3NQA3L5S
— BNO News (@BNONews) September 13, 2023