செப்டம்பர் 13, ஜெய்ப்பூர் (Rajasthan News): இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாரத்பூர் மாவட்டத்தில், இன்று குஜராத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணம் செய்த தனியார் பேருந்து, கண்டைனர் லாரி மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 11 பேர் பரிதாபமாக பலியாகினர்.
சுமார் 13க்கும் அதிகமானோர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் இருந்து உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுராவுக்கு சென்றுகொண்டு இருந்த தனியார் பேருந்து விபத்தில் சிக்கியது விசாரணையில் தெரியவந்தது.
அதிகாலை சுமார் 04:30 மணியளவில் விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து இரங்கல் தெரிவித்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 இலட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் நிதிஉதவி வழங்க உத்தரவிட்டு இருக்கிறார்.
இராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, முதல்வர் அசோக் கெலாட் ஆகியோரும் தங்களின் இரங்கலை பதிவு செய்துள்ளனர். விபத்து தொடர்பான விசாரணையில், லகான்பூர் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் பேருந்து நிறுத்தப்பட்டு இருந்தபோது, பின்னால் வந்த கண்டைனர் லாரி பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது உறுதியானது. Govt Job Scam: அரசு வேலை வாங்கி தருவதாக துப்புரவு பணியாளர் செய்த மோசடி; ரூ.71 இலட்சம் வாங்கி சொகுசு வாழ்க்கை..!
விபத்தில் 5 ஆண்கள் உட்பட 6 பெண்கள் என 11 பேர் பலியாகி இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் நிகழ்விடத்திலேயே பலியானதுதான் சோகத்தின் உச்சம். உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் குஜராத்தை சேர்ந்த மதுபென், அம்பாபென், ராமுபென், கம்புபென், அஞ்சுபென், அண்டு, நந்த்ராம், லல்லு, பாரத், லால்ஜி உட்பட 11 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.