Ghana Mass Shooting: பேருந்து பயணிகளை நோக்கி சரமாரியாக துப்பாக்கிசூடு; 9 பேர் பரிதாப பலி.!
காவலர்களை போல தடுப்பை ஏற்படுத்திய மர்ம நபர், திட்டமிட்டு பேருந்து பயணிகளை குறிவைத்து நடத்திய சரமாரி தாக்குதலில் 9 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
செப்டம்பர் 22, அக்ரா (World News): மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் (Accra, Ghana) இன்று பயங்கர துப்பாக்கிசூடு சம்பவம் நடந்துள்ளது. Panipat Gangrape: குடும்ப உறுப்பினர்கள் முன் 4 பேர் கும்பலால் 3 பெண்கள் கூட்டுப்பாலியல் வன்கொடுமை., ஒருவர் பலி.. ஒரேகிராமத்தில் கொள்ளைக்கும்பலால் பயங்கரம்.!
அங்குள்ள மேல் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் பவ்க்கு (Bawku) நகரில் இருந்து அக்ரா நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று பயணம் செய்தது. இந்த பேருந்து புர்கினா பாஸொ (Burkina Faso) பகுதியில் வந்துள்ளது.
அப்போது, துப்பாக்கியுடன் பேருந்துக்கு மிக அருகில் வந்த மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தி இருக்கிறார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 9 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தகவலை உறுதிசெய்துள்ள உள்ளூர் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர், உயிருக்கு போராடிய நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். Salem Crime: கள்ளகாதலியின் கணவரை போட்டுத்தள்ளி, மீண்டும் சிறைப்பறவையான வளையல் கடை உரிமையாளர்; அடுத்தடுத்து பதறவைக்கும் 2 கொலை.!
துப்பாக்கி குண்டுகள் துளைத்ததில் 9 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியானதாக அறிவிப்பட்டுள்ள நிலையில், காயமடைந்தவர்கள் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவல் துறையினர் தடுப்புகளை வைப்பதை போல, பேருந்தை நிறுத்தி மர்ம நபர் துப்பாக்கிசூடு சம்பவத்தை அரங்கேற்றி இருக்கிறார். இதேபோல இரண்டு இடங்களில் தாக்குதல் நடந்துழலத்தால், பாதுகாப்புத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன..
(The above story first appeared on LatestLY on Sep 22, 2023 12:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

