செப்டம்பர் 22, வீரகனூர் (Salem News): தனக்கு கிடைத்த நல்வாழ்க்கையில் உள்ள ஏற்ற-இறக்கத்தினை எதிர்கொண்டு வாழாமல், புதிதாக கிடைத்த வாழ்க்கையில் ஒளியேற்ற நினைத்தால் இறுதியில் வெளிச்சமே இல்லாத இருட்டில் தள்ளப்படும் நிலைக்கு ஆளாகுவோம் என்பதற்கு சாட்சியாக அமைந்துள்ளது வீரகனூர் கொலை சம்பவம்.
சேலம் மாவட்டத்தில் உள்ள வீரகனூர், ராயர்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ். வீரகனூர் பேருந்து நிறுத்தத்தில் சொந்தமாக வளையல் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரின் மனைவி தாரா. Akhil Mishra: அமீர்கானின் 3 இடியட்ஸ் படத்தில் நடித்த புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் காலமானார்; சோகத்தில் திரையுலகம்.!
கடந்த 2017ம் ஆண்டு குடும்பத்தகராறு காரணமாக மனைவி தாராவை வெட்டிப்படுகொலை செய்த செல்வராஜ், வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். பின் சொந்த ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில், ஜாமினில் வெளியே சுற்றிவந்த செல்வராஜுக்கு, பேன்சி ஸ்டோர் கடை நடத்தி வரும் செல்வம் என்பவரின் மனைவி சத்யாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதனால் கள்ளக்காதல் ஜோடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளது. சத்யாவின் கணவர் செல்வம் வைக்கோல் வியாபாரம் செய்துவந்த நிலையில், தொழிலுக்காக செல்வராஜிடம் இலட்சக்கணக்கில் பணம் வாங்கி வந்திருக்கின்றார். Tamil directors approach Telugu actor: டோலிவுட் பக்கம் திரும்பிய தமிழ் இயக்குனர்கள்: சான்ஸ் யாருக்கு என்பது சஸ்பென்ஸ்.!
இதற்கிடையில் மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் செல்வத்திற்கு தெரியவந்து கண்டிக்கவே, கணவரிடம் சண்டையிட்ட சத்யா வாழப்பாடியில் இருக்கும் தனது தாயாரின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்த தகவலை அறிந்த செல்வராஜ், தான் கொடுத்த பணத்தை திரும்பி உடனடியாக தரவேண்டும் என செல்வதை வற்புறுத்தி வந்துள்ளார். செல்வமோ பணம் தர மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் செல்வத்தை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். Rahul Gandhi Carries Baggage: ‘உழைப்பாளி இல்லாத நாடுதான் எங்கும் இல்ல’: கூலித் தொழிலாளிகளுடன் பெட்டி தூக்கிய ராகுல் காந்தி.!
சம்பவத்தன்று விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான செருப்பு கடையில் நின்றுகொண்டு இருந்த செல்வத்தை, செல்வராஜ் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்திருக்கிறார்.
இந்த தகவல் அறிந்த வீரகனூர் காவல் துறையினர், செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.