Man Lifts His Wife: "எனக்கு என் மனைவி வேண்டும்.." அமர்க்களம் அஜித் போன்று மனைவியை தூக்கிச் சென்ற கணவன்..!
மனைவி விவாகரத்து கோரிய நிலையில், அவரை பிரிய மனமில்லாத கணவர், மனைவியை தோளின் மேல் தூக்கிக்கொண்டு நீதிமன்றத்திலிருந்து தப்பி ஒடிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
அக்டோபர் 02, சீனா (World News): சீனாவினை சேர்ந்த தம்பதியினர் லீ மற்றும் சென். இவர்கள் இருவரும் 20 வருடங்களுக்கு மேல் ஆக திருமண வாழ்க்கையில் இருந்து வருகின்றனர். ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு கொண்டே இருந்துள்ளது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத மனைவி சென் ஒருநாள் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கணவர் தன்னிடம் சண்டை போட்டுக் கொண்டே இருப்பதாகவும் கொடுமைப்படுத்தியதாகவும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். Teen Accused of Killing Sister: 7 வயது தங்கையை சரமாரியாக குத்திக்கொன்ற 13 வயது அக்கா: கத்தரிக்கோலால் 10 முறை சதக்., சதக்..!
இந்த வழக்கின் விசாரணை ஆனது நீதிமன்றத்தில் வந்தது. அப்பொழுது நீதிபதி கணவன் மனைவி இருவருக்கும் இணைந்து வாழ சம்மதம் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு மனைவி தரப்பில் இருந்து இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் கணவர் தான் சேர்ந்து வாழ வேண்டும் என்று கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் மனைவியை தோளில் தூக்கிக்கொண்டு நீதிமன்றத்தில் இருந்து ஒரே ஓட்டமாக ஓடியுள்ளார். மனைவி சென் கூச்சலிடவே அங்கிருந்த அதிகாரிகள் லீயை பிடித்துள்ளனர். இதனைக் கண்ட நீதிபதி இனிமேல் இவ்வாறு செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து, மன்னிப்பு கடிதம் ஒன்றினை எழுதி வாங்கினார். மேலும் கணவன் மனைவி இடையே இன்னும் பிணைப்பு உள்ளது என்று கூறி நீதிபதி இந்த வழக்கினை தள்ளுபடி செய்தார்.
(The above story first appeared on LatestLY on Oct 02, 2024 08:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

