Teen Accused of Killing Sister: 7 வயது தங்கையை சரமாரியாக குத்திக்கொன்ற 13 வயது அக்கா: கத்தரிக்கோலால் 10 முறை சதக்., சதக்..!
ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான மிக்சிகன் அக்கா தங்கை இடையே நடந்த விவாதத்தில் சிறுமி தங்கையை கத்தரிக்கோலால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அக்டோபர் 02, மிக்சிகன் (World News): ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான மிக்சிகனில் ஒரு குடும்பம் வசித்து வந்துள்ளது. பொதுவாக மேற்கத்திய நாடுகளில் தாய் தந்தையினர் வெளியே செல்லும் பொழுது குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக ஒருவரை நியமித்துவிட்டு செல்வர். அதேபோன்று அங்கும் ஒருவரினை நியமித்துவிட்டு, அவர்களின் 13 மற்றும் ஏழு வயதான இரண்டு பெண் குழந்தைகளை தனியே விட்டுவிட்டு சென்றனர். அப்போது இந்த இரவு சிறுமிகளுக்கிடையே மிகப்பெரிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதாவது ஏழு வயதினை உடைய சிறுமி, கழிவறையை சரியாக சுத்தம் செய்யாததினால் அச்சிறுமியின் சகோதரி மிகவும் கோபத்துடன் விவாதம் செய்துள்ளார். Travel Advisory: இஸ்ரேல் - ஈரான் போர் சூழல்.. ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு இந்திய அரசு எச்சரிக்கை..!
இவர்களின் சண்டை உச்சத்திற்கு செல்லவே 13 வயது சிறுமி அருகில் உள்ள கத்தரிக்கோலினை எடுத்து தனது தங்கையை 10 முறை குத்தியுள்ளார் (Killing Sister). குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக வந்த நபர், இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு அழைப்பு விடுத்தார். அங்கு வந்த காவல்துறை சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தங்கையை கொலை செய்ததற்காக 13 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
(The above story first appeared on LatestLY on Oct 02, 2024 02:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

