World War 3: "மூன்றாம் உலகப் போர் தொடங்கியது" உக்ரைனின் முன்னாள் உயர்மட்ட ஜெனரல் வலேரி ஜலுஸ்னி..!
மூன்றாம் உலகப் போர் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது என்று உக்ரைனின் முன்னாள் உயர்மட்ட ஜெனரல் வலேரி ஜலுஸ்னி கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 22, மாஸ்கோ (World News): கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கியது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் உக்ரைனும் பதிலடி கொடுத்து வரும் நிலையில், இரண்டு வருடங்கள் ஆகியும் போரின் (Ukraine-Russia War) தீவிரம் குறையவில்லை. இந்நிலையில், ரஷ்யாவின் எல்லைக்குள் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் உக்ரைன் படைகள் நுழைந்ததாக தகவல் வெளியானது.
ரஷ்யா- உக்ரைன் போர்: சமீபத்தில், மாஸ்கோ மற்றும் ரஷ்யாவின் டொரோபெட்ஸில் உள்ள இராணுவ தளத்தின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து 200-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதலை நடத்தியது. மேலும் கருங்கடலில் உள்ள பாம்பு தீவு அருகே ரஷ்ய ராணுவத்துடன் உக்ரேனியப் படைகள் கடுமையான மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். Brazil President Luiz Inacio Lula da Silva: பிரேசில் அதிபரை கொலை செய்ய திட்டம்; 2 ஆண்டுகளுக்கு பின் அம்பலமான உண்மை.. அதிர்ச்சியில் மக்கள்.!
யுனிசெஃப் தகவல்: யுனிசெஃப் (UNICEF) வெளியிட்டிருக்கும் தகவலின்படி, ரஷ்ய - உக்ரைன் போர் 1,000 நாட்களை எட்டும் நிலையில், இதுவரை 659 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 1,747 குழந்தைகள் காயமடைந்துள்ளனர். ஒவ்வொரு வாரமும் குறைந்தது 16 குழந்தைகள் உயிரிழந்தும், காயமடைந்தும் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1000 நாட்களில், குறைந்தது 1,496 கல்வி நிறுவனங்கள், 662 சுகாதார வசதிகள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன என்று ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது.
ஒப்புதல் அளித்த புதின்: இந்த போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பான புதிய கொள்கையில் புதின் (President Vladimir Putin) கையெழுத்திட்டுள்ளார். இதன்படி, அணு ஆயுதம் இல்லாத நாடு, அணு ஆயுதம் வைத்திருக்கும் நாட்டுடன் கூட்டணி வைத்து ரஷ்யா மீது போர் தாக்குதல் மேற்கொண்டால், பதிலுக்கு அந்நாட்டின் மீது ரஷ்யாவும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் உலகப் போர்: போர் என்ற பெயரில் மனிதர்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்யக் கோரி சர்வதேச நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. இதற்கிடையே மூன்றாம் உலகப் போர் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது என்று உக்ரைனின் முன்னாள் உயர்மட்ட ஜெனரல் வலேரி ஜலுஸ்னி கூறியுள்ளார். ரஷ்யாவிற்கு ஆதரவாக 10,000 வட கொரியா வீரர்கள் இந்த போரில் இணைந்துள்ளனர். இதனால் போர் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

