ஜூலை 08, டொராண்டோ (World News): 90 கிட்ஸ்-களின் மறக்க முடியாத குத்துச்சண்டை வீரர், டபிள்யுஇ (WWE Champion) லெஜண்ட் ஜான் சீனா (John Cena), 20 ஆண்டுகளுக்கு பின் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். அமெரிக்காவில் மிகப்பிரமாண்டமான அளவில் ரசிக்கப்பட்ட குத்துச்சண்டை, பின்னாளில் உலகளவில் கவனிக்கப்பட்டது. டபிள்யு.டபிள்யு.இ எனப்படும் குத்துச்சண்டை பிரிவில், மிகப் பிரபலமானவர் ஜான் சீனா. இவர் கடந்த 20 ஆண்டுகளாக குத்துச்சண்டை வீரராக செயல்பட்டு வந்துள்ளார். Terrorists Hid In Bunker: போலியான கபோர்டுக்குள் ரகசிய அறை; பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டின் ரகசியம் உடைத்த இராணுவம்.!
ஓய்வை அறிவித்த ஜான் சீனா:
இதனிடையே, 2025 ஆம் ஆண்டு முதல் தான் ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். கனடா நாட்டில் நடைபெற்ற குத்துசண்டை போட்டியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜான் சீனா, தனது ஓய்வு தொடர்பான அறிவிப்பை ரசிகர்கள் முன்பு தெரிவித்து இருந்தார். தற்போது ஜான் சீனாவுக்கு 47 வயது ஆகிறது. அவரின் ஓய்வு குறித்த தகவலை முன்னதாகவே அறிந்திருந்த ரசிகர்கள், மைக்கை அவர் கையில் எடுத்ததும் ஓய்வு பெற வேண்டாம் என உரக்க கூச்சலிட்டு தங்களின் கோரிக்கையை முன்வைத்தனர்.
2025 வரை அதிரடி தொடரும்:
ஆனால், தனது நிலையை கருத்தில்கொண்டு ஜான் சீனா, ஓய்வை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டியில் அறிமுகமானவர், கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு பின் ஓய்வு அறிவித்திருக்கிறார். ஐவர் 16 முறை டபிள்யுஇ சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்று இருக்கிறார். 2025ல் நடைபெற உள்ள ராயல் ரம்பில், எலிமினேஷன் சேம்பர், வேர்ஸ்டன்மேனியா ஆகிய ஆட்டத்தில் போட்டியிட்டு பின் தான் ஓய்வு பெற இருப்பதாகவும் ஜான் சீனா கூறியிருக்கிறார்.
மல்யுத்த போட்டியாளராக மட்டுமல்லாமல் ஹாலிவுட் நடிகராகவும் இருந்த ஜான் சீனா ரஷ் ஹவர் உட்பட பல அதிரடி காட்சிகள் நிறைந்த திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு வெளியான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தின் இறுதி பாகத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த இசையை மறக்க முடியுமா?..
That first time John Cena came out with his "The Time Is Now" theme song
What a time to be alive 🥹 pic.twitter.com/qUbKPtcO6C
— Wrestling Pics & Clips (@WrestleClips) July 5, 2024
ஜான் சீனாவின் ஓய்வு அறிவிப்பு:
John Cena answers @ChrisVanVliet’s question asking why 2025 will be the year of his retirement:
Cena says that he approached WWE with the idea and they initiated the talks that it would be a great span of time if he ever were to retire, adding that it warmed his heart that his… pic.twitter.com/ySEF5LRwWS
— PW Chronicle (@_PWChronicle) July 7, 2024