Bunker In Terrorist House (Photo Credit: @NDTV X)

ஜூலை 08, குல்காம் (Jammu Kashmir News): ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குல்காம் மாவட்டம், சின்னிகம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் நான்கு பயங்கரவாதிகள் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், இரண்டு இராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்தனர். Cracks in Land: நிலங்களில் ஏற்படும் திடீர் விரிசல்; காரணம் என்ன?.. விழிபிதுங்கும் கிராம மக்கள்.! 

கபோர்டுக்குள் ரகசிய அறை:

இந்த விஷயம் குறித்து ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த நபரின் வீட்டையும் சோதனை செய்தனர். அப்போது வீட்டுக்குள் கபோர்டு போன்ற அமைப்பு ஒன்று சர்ச்சையான வகையில் இருந்துள்ளது. இதனால் கபோர்டு பகுதியில் சோதனை செய்தபோது, அது வீட்டில் மறைவான பகுதிக்கு செல்லும் நுழைவாயில் என்பது தெரிய வந்தது. இதன் வாயிலாக பயங்கரவாதிகள் அங்கு பதுங்கி இருந்ததும் உறுதி செய்யப்பட்டது.

6 பயங்கரவாதிகள் என்கவுண்டர்:

என்கவுண்டர் செய்யப்பட்ட நான்கு பயங்கரவாதிகளும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள். இவர்களில் உள்ளூரைச் சேர்ந்த அவர்களின் வழிகாட்டியான தளபதி ஒருவர் கொல்லப்பட்டதும், மொத்தமாக தெற்கு காஷ்மீர் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் 6 பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளதும் நடந்துள்ளது. கொலை செய்யப்பட்ட 4 பயங்கரவாதி யவர் பஷீர் தார், ஜாஹித் அகமது தார், தவ்ஹீத் அகமது ராதர் மற்றும் ஷகீல் வானி என அடையாளம் காணப்பட்டுள்ளார். பிற 2 பயங்கரவாதிகள் பைசல் & ஆதில் என கண்டறியப்பட்டுள்ளனர்.

தற்போது இவர்கள் வீட்டுக்குள் தனியாக அறை அமைத்து பதுங்கி இருந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

வீடியோ நன்றி: என்டிடிவி