Bajaj Pulsar N250 Launched in India: மீண்டும் பொல்லாதவனின் வண்டியை களமிறக்கும் பஜாஜ்.. பஜாஜ் பல்சர் என்250 விற்பனைக்கு அறிமுகம்..!

பஜாஜ் பல்சர் என்250 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.

Bajaj Pulsar N250 (Photo Credit: @rushlane X)

ஏப்ரல் 10, புதுடெல்லி (New Delhi): 2024 பஜாஜ் பல்சர் என்250 (Bajaj Pulsar N250) பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பைக்கிற்கு அறிமுகமாக 1 லட்சத்து 50 ஆயிரத்து 829 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முந்தைய வெர்ஷன் பல்சர் என்250 மாடலில் 37 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் வழங்கப்பட்ட நிலையில், இந்த பல்சர் என்250 மாடலில் அதே 37 மிமீ அளவுள்ள யுஎஸ்டி ஃபோர்க் வழங்கப்பட்டு இருக்கின்றது. Madurai Car Accident: மதுரை திருமங்கலம் அருகே நடந்த கொடூரம்.. டூவீலரில் கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி..!

மேலும் இந்த பைக்கில் புதிய எல்சிடி திரையும் பஜாஜ் வழங்கி இருக்கின்றது. அதுமட்டுமின்றி ப்ளூடூத் இணைப்பு, செல்போனுக்கு வரும் குறுஞ்செய்தி, அழைப்புகளைக் காணும் வசதி, நேவிகேஷனை பார்த்தல் போன்றவற்றை இந்த திரை வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும். எஞ்சினைப் பொருத்த வரை 249 சிசி சிங்கில் சிலிண்டர் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன், பைக்கின் சுவிட்ச் கியர்களும் மாற்றப்பட்டு இருக்கின்றன.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement