ஏப்ரல் 10, மதுரை (Madurai News): மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த கனகவேல் என்பவர் தளவாய்புரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று காலை மதுரை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் ஓட்டி வந்த கார் திருமங்கலம் சிவரக்கோட்டை நான்கு வழிச்சாலையில் வந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் நிலையூரை சேர்ந்த கொய்யாப்பழ வியாபாரி பாண்டி மீது மோதியது. Chandrayaan-4 Mission Update: ஒரே நேரத்தில் 2 ராக்கெட்களை விண்ணிற்கு அனுப்ப திட்டம்.. சந்திராயன் 4 குறித்து அப்டேட் தெரிவித்த இஸ்ரோ தலைவர்..!

இதில் கார் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த கனகவேல் மற்றும் அவரது மனைவி கிருஷ்ணகுமாரி, உறவினர் நாகஜோதி மற்றும் ஒரு குழந்தை ஆகிய நான்கு பேரும் கொய்யாப்பழ வியாபாரி பாண்டியும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே (Five people were murdered in a traffic accident) உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உயிரிழந்த 5 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.