Mahindra and Mahindra: உள்நாடு & ஏற்றுமதியில் 31% அதிக வாகன விற்பனையில் ஈடுபட்ட மகேந்திரா குழுமம்..!

மே மாதம் மட்டும் மொத்தமாக 71,682 வாகனங்களை விற்பனை செய்துள்ள மகேந்திரா நிறுவனம், தனது வளர்ச்சியை 17% என்ற அளவில் அதிகரித்து இருக்கிறது.

Mahindra & Mahindra (Photo Credit: Wikipedia)

ஜூன் 01, புதுடெல்லி (New Delhi): இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமாக இருந்து வரும் மகேந்திரா & மகேந்திரா குழுமம், மே மாதத்தில் தனது கார் விற்பனை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி கடந்த மாதம் மகேந்திரா கார் விற்பனை எண்ணிக்கை 71,682 என்ற அளவில் இருக்கிறது. இதனால் ஏற்றுமதி வளர்ச்சி 17% உயர்ந்து இருக்கிறது. BJP TMC Clash in WB: பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்; செய்தியாளரின் மண்டை உடைப்பு.! 

நல்ல வரவேற்பு: எஸ்யுவி வாகனங்களில் உள்நாட்டு சந்தையில் 43,218ம், ஒட்டுமொத்தமாக 44,283 வாகனத்தையும் விற்பனை செய்து இருக்கிறது. உள்நாட்டு வர்த்தக வாகனங்கள் விற்பனை என்பது 19,826 அளவில் இருக்கிறது. இதனால் வளர்ச்சி விகிதம் என்பது 31% என்ற அளவில் இருக்கிறது.

மே மாதம் மொத்தமாக 43,218 எஸ்யுவிக்களை விற்பனை செய்துள்ள மகேந்திரா, மொத்தமாக 71,682 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 17% அதிகம் ஆகும். மே 15ல் எஸ்யுவி எக்ஸ்யுவி 3 எக்ஸ்ஓ முன்பதிவு தொடங்கி வைக்கப்பட்டது. அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், சிலமணிநேர முன்பதிவுக்குள் 50000 வரவேற்பையும் பெற்று சாதனை படைத்தது. மே 26ம் தேதி முதல் அதன் விநியோகமும் தொடங்கி இருக்கிறது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement