செப்டம்பர் 10, டெல்லி (Delhi News): எப்படியாவது கஷ்டப்பட்டு வாழ்க்கையில் ஒரு கார், ஒரு வீடு வாங்கி விட வேண்டும் என்பது இன்றைய இளைஞர்களின் கனவாக இருக்கிறது. பாரம்பரியத்துக்கு பெயர் போன இந்தியாவில் புதிதாக எந்த பொருட்களை வாங்கினாலும் கோவிலுக்கு அந்த பொருளை எடுத்துச் சென்று வழிபாடு செய்வது முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகவும் இருக்கிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள நிர்மன் விகார் பகுதியில் மகேந்திரா ஷோரூம் செயல்பட்டு வருகிறது.
முதல் மாடியிலிருந்து பாய்ந்த கார் :
இந்த ஷோரூமில் மாணி பவார் என்ற பெண்மணி தான் புதிதாக வாங்கிய மகேந்திரா தார் காருக்கு பூஜை செய்ய முடிவெடுத்துள்ளார். இதனை அடுத்து முன்பதிவு செய்த காரை பூஜை செய்ய எடுத்துச் செல்ல ஷோரூம்க்கு வந்தார். அப்போது காரில் நான்கு பக்க சக்கரத்திலும் எலுமிச்சை வைக்கப்பட்டிருந்தது. காரின் மீது ஏறி அமர்ந்து லேசாக தள்ளி எலுமிச்சம்பழத்தை நசுக்க திட்டமிடப்பட்ட நிலையில், தவறுதலாக ஆக்சிலேட்டர் அழுத்தப்பட்டுள்ளது. தேர்வு எழுத அனுமதிக்காத ஆசிரியர்.. கத்தியால் குத்திக்கிழித்த மாணவன்.. திடுக் சம்பவம்.!
தலைகீழாக கவிழ்ந்த மகேந்திரா தார் :
அப்போது கார் கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து கண்ணாடியை உடைத்து கொண்டு திரைப்பட பாணியில் வெளியே தலைகீழாக விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் இல்லை என்றாலும் சிறிய அளவிலான காயத்தினால் பாதிக்கப்பட்டனர். மேலும் தலைகீழாக மகேந்திரா கார் கவிழ்ந்திருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
மாடியிலிருந்து பாய்ந்து தலைகீழாக மகேந்திரா தார் இருக்கும் வீடியோ :
दिल्ली के निर्माण विहार में स्थित महिंद्र शोरूम से महिला ने 27 लाख की थार खरीदी और शोरूम में ही पूजापाठ की, महिला को कार का पहिया नींबू पर चढ़ाना था लेकिन महिला ने ज्यादा एक्सीलेटर दिया और कार बिल्डिंग को तोड़ते हुए 15 फीट नीचे गिर गई#delhi #thar #viralvideo #laxminagar pic.twitter.com/oGgAvDkeZg
— Live Viral Breaking News (@LVBNewsOfficial) September 9, 2025