ஜூலை 16, மும்பை (Technology News): உலகளவில் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின், டெஸ்லா கார் நிறுவனம் தற்போது இந்தியாவில் முதல்முறையாக ஷோரூமை திறந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் மேற்கு குர்லா பகுதியில் நிறுவப்பட்டுள்ள டெஸ்லா கார் நிறுவனத்தின் ஷோரூமை அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இன்று (ஜூலை 16) திறந்து வைத்தார். ஆரம்பத்தில் டெஸ்லா மாடல் Y கார்கள் ரூ. 61 லட்சத்துக்கு விற்பனை செய்யவுள்ளது. ChatGPT Down: உலகளவில் திடீரென முடங்கியது சேட்ஜிபிடி.. பயனர்கள் அவதி.!
ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து:
இந்நிலையில், இந்தியாவில் டெஸ்லா கார் ஷோரூம் திறக்கப்பட்டதற்கு, பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா எலான் மஸ்கிற்கு தனது வாழ்த்துக்களை எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், 'எலான் மஸ்க்கையும் அவரது டெஸ்லா நிறுவனத்தையும் இந்தியாவிற்கு வரவேற்கிறேன். உலகின் மிகப்பெரிய மின்சார வாகன வாய்ப்புகளில் ஒன்று இப்போது மிகவும் உற்சாகமாகிவிட்டது. போட்டி புதுமைகளை உந்துகிறது. மேலும், நம் முன்னால் நிறைய பாதைகள் உள்ளன. சார்ஜிங் நிலையத்தில் உங்களைப் பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்' என அவர் பதிவிட்டுள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா ட்வீட்:
Welcome to India, @elonmusk and @Tesla.
One of the world’s largest EV opportunities just got more exciting.
Competition drives innovation, and there’s plenty of road ahead.
Looking forward to seeing you at the charging station. pic.twitter.com/7Uh2ziV0fp
— anand mahindra (@anandmahindra) July 15, 2025