RCB Win IPL 2025 (Photo Credit: @IPL X)

ஜூன் 10, லண்டன் (Sports News): 2025 டாடா ஐபிஎல் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனையடுத்து, ஆர்சிபி ரசிகர்கள் அணியின் வெற்றியை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். அந்தவகையில், ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வந்த 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. SS Vs TGC Toss Update: திருச்சி டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. சேலம் அணியின் வெற்றி பயணம் தொடருமா?

ஆர்சிபி அணி விற்பனை (RCB Team Selling Price):

இந்நிலையில், ஆர்சிபி அணியை விற்பனை செய்ய அந்த அணியின் உரிமையாளர் நிறுவனமான டியாஜியோ பிஎல்சி (Diageo Plc) முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 17,128 கோடி ரூபாய்க்கு, அமெரிக்க மதிப்பில் 2 பில்லியன் டாலருக்கு விற்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில், ஆர்சிபி அணியை விஜய் மல்லையா தொடங்கினார். விஜய் மல்லையாவின் முன்னாள் நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை 2012ஆம் ஆண்டு டியாஜியோ வாங்கியது. இதுவரை, அதிகாரப்பூர்வ முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.