Malaiyalam TV Actress Died by Heart Attack: பிரபல மலையாள நடிகை, மருத்துவருமான பிரியா மாரடைப்பால் காலமானார்.. 8 மாத கர்ப்பிணிக்கு நடந்த சோகம்.!
ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு, அவ்வப்போது உடல்பரிசோதனை செய்த கர்ப்பிணி நடிகை மாரடைப்பால் திடீரென காலமானார்.
நவம்பர் 01, திருவனந்தபுரம் (Cinema News): கேரளா மாநிலத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கருத்தமுத்து நெடுந்தொடரில் நடித்து பிரபலமடைந்த நடிகை பிரியா (Dr.Priya). இவர் மருத்துவர் ஆவார். திரைத்துறை மீது ஏற்பட்ட ஆர்வத்தை தொடர்ந்து, தொலைக்காட்சி நெடுந்தொடரில் நடித்து பிரபலமடைந்தார்.
இவரின் கணவர் நன்னா. தம்பதிகள் இருவரும் திருமணமாகி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். பிரியா திருவனந்தபுரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் மருத்துவராகவும் பணியாற்றி வந்தார். 35 வயதாகும் நடிகை பிரியா, திருமணத்திற்கு பின்னர் தொடர்களில் நடிக்கவில்லை எனினும், அவரை மக்கள் தங்களின் மனதில் வைத்திருந்தனர்.
இதனிடையே, தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்த நடிகை பிரியாவுக்கு, நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மயங்கி விழுந்த பிரியாவை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க, அங்கு அவரின் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டது. PM Modi Motivating Athletes: இளம் தலைமுறை வீரர்களை ஊக்கப்படுத்தும் பிரதமர் மோடி - ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற சுமித் பெருமிதம்.!

பிரியா 8 மாத கர்ப்பிணி என்பதால், அவரின் வயிற்றில் இருந்த குழந்தை அறுவை சிகிச்சை முறையில் வெளியே எடுக்கப்பட்டு, அக்குழந்தையும் ஐ.சி.யு-வில் சிகிச்சை பெற்று வருகிறது. சின்னத்திரை நடிகையின் மறைவு அவரின் குடும்பத்தை மட்டுமல்லாது, மலையாள திரையுலகினரை சோகத்திற்கு உள்ளாக்கியது.
தற்போதைய நவநாகரீக உலகில் இளம் தலைமுறையினரிடையே மாரடைப்பு தொடர்பான அபாயம் அதிகரித்து வருகிறது. அவர்களின் உணவுப்பழக்கவழக்கம், சுற்றுப்புற சூழல் உட்பட பல்வேறு காரணங்கள் மாரடைப்புக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
மனித உடலைப்பற்றி மருத்துவம் பயின்ற மருத்துவரே மாரடைப்பு காரணமாக காலமாகி இருக்கிறார். கர்ப்பமாக இருக்கும்போது ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு, அவ்வப்போது உடல்பரிசோதனை செய்த நடிகைக்கே இந்நிலை ஏற்பட்டுள்ளது தான் இயற்கையின் நீதியாக இருக்கலாம்.
(The above story first appeared on LatestLY on Nov 01, 2023 08:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

