நவம்பர் 01, புதுடெல்லி (Sports News): ஆசிய விளையாட்டுப்போட்டியில் வெற்றியடைந்த வீரர்களை பிரதமர் மோடி சந்தித்து வரும் நிகழ்வு டெல்லியில் நடைபெறுகிறது. சமீபத்தில், அவர் பாரா ஈட்டி எறிதல் வீரர் சுமித்தை சந்தித்து பேசியிருந்தார். இதுகுறித்து சுமித் பேசுகையில், "சமீபத்தில் நான் ஆசிய விளையாட்டுகளில் தங்கப்பதக்கம் வென்றேன், உலக சாதனை படைத்தேன். நான் பெருமையாக உணர்கிறேன். நமது பிரதமர் மோடி விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பது எனக்கு பிடித்துள்ளது. அவரின் ஊக்குவிப்பு, எதிர்கால இளம் தலைமுறையினருக்கு உந்துகோலாக அமையும்" என கூறினார். சீனாவில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டுப்போட்டிகளில், ஈட்டி எறிதல் பிரிவில் 25 வயதுடைய இந்திய விளையாட்டு வீரர் சுமித் அன்டில் F64 பிரிவில், 73.29 மீட்டர் ஈட்டியை எரிந்து உலக சாதனை படைத்தது தங்கப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. Improve Bone Strength: எலும்புகளின் உறுதிக்கு தினமும் நாம் சாப்பிடவேண்டியவை என்ன?.. அசத்தல் டிப்ஸ் இதோ.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)