Actress Sona: நடிகை சோனாவின் வீட்டில் ஏசி திருட்டு முயற்சி; 2 பேர் கைது.. காவல்துறையினர் அதிரடி.!
ஏசியை திருடவந்து நாயினால் சிக்கிக்கொண்ட கொள்ளையர்கள், நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை தந்து இருந்தது. இதனிடையே, குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அக்டோபர் 05, சென்னை (Chennai News): தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகை, நடன இயக்குனராக இருந்து வருபவர் நடிகை சோனா. இவர் மதுரவாயல், கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். இவர் தனது வசதிக்காக வீட்டில் ஏசி பொருத்தி இருக்கிறார். இதனிடையே, சம்பவத்தன்று நடிகையின் வீட்டில் அத்துமீறி நுழைந்த 2 நபர்கள், ஏசி-யின் வெளிப்புற யூனிட் பகுதியை திருடிச் செல்ல முற்பட்டுள்ளனர். Priyanka Mohan: திடீரென சரிந்த மேடை.. தொப்பென்று விழுந்த பிரியங்கா மோகன்.. என்ன ஆச்சு? வைரலாகும் வீடியோ.!
தப்பிச்சென்ற கொள்ளையர்கள்:
இதனால் அவரின் வளர்ப்பு நாய் திருடர்களை பார்த்து குறைக்கவே, அங்கு வந்த நடிகை சோனாவை இருவர் கும்பலும் கத்தி முனையில் மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இதனால் பதறிப்போன நடிகை சோனா செய்வதறியாது திகைக்க, தங்களை மக்கள் பிடித்துவிடுவார்கள் என கொள்ளையர்கள் இருவரும் சுவரை ஏறிக்குதித்து தங்களின் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். Rajinikanth Discharged From Hospital: "கண்ணா.. சும்மா அதிருதுல.." மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!
இருவரும் அதிரடி கைது:
இந்த விஷயம் தொடர்பாக நடிகை சோனா காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் மதுரவாயல் காவல் துறையினர் கொள்ளையர்கள் வந்து சென்ற இருசக்கர வாகனங்கள் மற்றும் அவர்களின் முகத்தை சிசிடிவி கேமிரா உதவியுடன் கண்டறிந்தனர். இந்நிலையில், இன்று மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த சிவா, லோகேஷ் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர், இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களே நடிகை சோனாவின் வீட்டில் ஏசியை திருட முயற்சித்தது முதற்கட்டமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
(The above story first appeared on LatestLY on Oct 05, 2024 12:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

