Akira Toriyama Died: 90 கிட்ஸ்களே நினைவிருக்கா?... டிராகன் பால் கார்ட்டூன் உருவாக்கியவர் மரணம்..! விபரம் உள்ளே.!
இளமைக்காலத்தில் நாம் கண்டுவியந்த அட்டகாசமான கார்ட்டூன்களில் ஒன்றான டிராகன் பால் தொடரை உருவாக்கியவர் மரணம் அடைந்தார்.
மார்ச் 08, டோக்கியோ (Cinema News): ஜப்பானிய நாட்டை சேர்ந்த பிரபலமான சித்திர தொடர் எழுத்தாளர் அகிரா டோரியமா (Akira Toriyama). தனது 20 வயதில் தீவில் தனியே சிக்கிய விமானியின் பயணங்களை ஒண்டெர் ஐலேண்ட் (Wonder Island) என்ற பெயரில் வெளியிட்டு பலரையும் திரும்பி பார்க்க வைத்தார். US Govt Websites Down: அமெரிக்க அரசின் பல இணையதளங்கள் அடுத்தடுத்து முடங்கியது: மக்கள் அவதி.!
ஜப்பானிய படைப்புகள் சிலவற்றுக்கு சொந்தக்காரர்: அதனைத்தொடர்ந்து, கடந்த 1984ம் ஆண்டு வாக்கில், இவரின் கற்பனையில் உதித்த டிராகன் பால், டிராகன் பால் ஜி ஆகிய சித்திர கதாபாத்திரங்கள் உலகளவில் வரவேற்பை பெற்று இவருக்கான அடையாளத்தை பெற்றுத்தந்தது. இதுமட்டுமல்லாது பெண் குயின் வில்லேஜ் ரோபோ, டாக்டர் ஸ்லம்ப் உட்பட பல படைப்புகளையும் அவர் உருவாக்கி இருக்கிறார். PM Modi Announce LPG Cylinder Price Deduction: மகளிர் தினத்தில் உற்சாக செய்தி; சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு - பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு.!
ரசிகர்கள் சோகம்: கடந்த ஏப்ரல் 5, 1955ல் ஜப்பான் நாட்டில் உள்ள நகோயாவில் பிறந்த அகிரா, தற்போது தனது 68 வயதில் இயற்கை எய்தினார். நேற்று அவரின் மரணத்தை தொடர்ந்து, குடும்பத்தினர் & உறவினர்களால் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. சித்திர கதாபாத்திரங்கள் வாயிலாக பலரின் மனம் கவர்ந்த அகிரா, சித்திர கதாபாத்திரங்களுடன் தனது வாழ்க்கையை வாழுவதற்கு புறப்பட்டு சென்றுவிட்டதாக அவரின் ஆதரவாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
ரசிகர் வருத்தும் பதிவு: