US Govt Websites Down (Photo Credit: @BNONews / Pixabay_

மார்ச் 08, வாஷிங்க்டன் டிசி (Technology News): இன்றைய நவீனமயமான உலகில் இணையதள சேவை, மக்கள் பயன்பாடு செயலிகள் என உலகமே கையடக்க அளவில் வந்துவிட்டது. உலகின் எந்த ஒரு மூலையிலும் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களும் வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சி, தொடுதிரை அலைபேசி ஆகியவற்றில் நான் காணும் வாய்ப்புகள் அதிகரித்துவிட்டன. உலகம் நவீனமயமாகி முன்னேற்றப்பாதையில் சென்றாலும், குற்ற நடவடிக்கை எண்ணம் கொண்டோர் வளர்ச்சியை தங்களுக்கு சாதகமாக எடுத்து பாதக செயல்பாடுகளில் ஈடுபடுவதும் தொடர்கதையாகிறது. சர்வதேச அளவில் சைபர் குற்றங்கள் எனப்படும் இணையவழி தொழில்நுட்ப குற்றங்கள் அதிகரிப்பதும், அரசின் அதிகாரபூர்வ பக்கங்கள் திடீரென முடக்கப்படுவது நடந்து வருகிறது. Flight Losses Tire While Taking off: விமானம் மேலெழும்பிய அடுத்த நொடியே கழன்று விழுந்த சக்கரம்; நொடியில் ட்விஸ்ட் வைத்த சம்பவம்.!

மக்கள் அவதி: ஒருசில நேரம் தொடர் பயன்பாடுகள் காரணமாகவும் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுவது உண்டு. இந்நிலையில், இன்று அமெரிக்க அரசின் பல்வேறு இணையதளங்கள் அடுத்தடுத்து முடங்கி இருக்கின்றன. அமெரிக்க அரசின் ரகசிய சேவை இணையத்தளம், டிஎச்எஸ், ஐசிஇ, எப்இஎம்ஏ உட்பட பல இணையங்கள் சிலமணிநேரம் முடங்கிப்போனது. இதனையடுத்து, தொழில்நுட்ப குழுவினர் அதனை சரி செய்யும் பணியில் களமிறங்கி, தற்போது அனைத்து பக்கங்களின் செயல்பாடுகளையும் புதுப்பித்து இருக்கின்றனர். அரசின் அதிகாரபூர்வ இணையதளப்பக்கத்தை பயன்படுத்த இயலாத காரணத்தால் மக்கள் சிலமணிநேரம் அவதிப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.