Narendra Modi, Prime Minister of India (Photo Credit: @ANI Twitter)

மார்ச் 08, புதுடெல்லி (New Delhi): சர்வதேச அளவில் மகளிர் தினம் மார்ச் 08ம் தேதியான இன்று சிறப்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தனக்காகவும், குடும்பத்திற்காகவும் உழைத்து வந்த பெண்கள், இன்றளவில் ஒவ்வொரு துறையிலும் கால்பதித்து சாதனை படைத்து வருகின்றனர். மகளிருக்கான (Women's Day) உரிய அங்கீகாரத்தை வழங்கவும், அதனை செயல்படுத்தி வெற்றிப்பாதையில் அவர்களை அழைத்துச்செல்ல உத்வேகத்தை ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 08ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்படுவதாக அறிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். Flight Losses Tire While Taking off: விமானம் மேலெழும்பிய அடுத்த நொடியே கழன்று விழுந்த சக்கரம்; நொடியில் ட்விஸ்ட் வைத்த சம்பவம்.! 

அரசின் மகளிருக்கான நிலைப்பாடு: அந்த பதிவில், "மகளிர் தினமான இன்று, எல்.பி.ஜி சிலிண்டர் விலை ரூ.100 குறைக்க எண்களின் அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் நாடு முழுவதிலும் இருக்கும் மில்லியன் கணக்கான குடும்பத்தின் நிதிச்சுமை என்பது குறையும். நாரி சக்தி எனப்படும் மகளிர் சக்திக்கு இது பெரிதும் உதவும். தினமும் பயன்படும் சமையல் எரிவாயு விலையினை மலிவு விலையில் வழங்குவதால், குடும்பத்தின் நல்வாழ்வு அதிகரிக்கும். ஆரோக்கியமான சூழல் உண்டாகும். பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், அவர்களுக்கான எளிய வாழ்க்கையை உறுதி செய்தல் போன்றவை எங்களின் உறுதிப்பாடு ஆகும்" என கூறியுள்ளார்.

மகளிராக இன்றைய நாளை நீங்களும் மகிழ்ச்சியாக சிறப்பியுங்கள்.. ஒவ்வொரு மகளிருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..