Actor Ashok Selvan Wedding: அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியன் ‘டும் டும் டும்’ முடிந்தது: சமூக வலைதளங்களில் பிரபலங்கள் வாழ்த்து.!

அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன் இருவருக்கும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இட்டேரி கிராமத்தில் உறவினர்களும் நண்பர்களும் சூழ இன்று இனிதே திருமணம் நடைபெற்றது. அதை தொடர்ந்து அவர்கள் மனக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கின்றனர். ரசிகர்களும் பிரபலங்களும் இவர்களுக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Ashok Selvan-Keerthi Pandian Wedding (Photo Credit: Twitter)

செப்டம்பர் 13 , திருநெல்வேலி (Cinema News): சூது கவ்வும் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் அசோக் செல்வன். அதைத்தொடர்ந்து தமிழில் சில வெற்றி படங்களை கொடுத்த அசோக் செல்வன், தெலுங்கு மலையாளம்  உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் நடித்த போர் தொழில் திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூலையும் அள்ளிக் குவித்திருந்தது.

கடந்த சில வருடங்களாக அசோக் செல்வனும் நடிகை கீர்த்தி பாண்டியனும் காதலித்து வந்திருக்கின்றனர். கீர்த்தி பாண்டியன் நடிகர் மற்றும் இயக்குனரான அருண் பாண்டியனின் மகள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்தோடு இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இட்டேரி கிராமத்தில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. 6 Airbags Mandatory Rule: கார்களுக்கு 6 ஏர்பேக் விதிமுறை கட்டாயமாக்கப்படுமா?.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

திருமணத்தில் இவர்களின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள்  மட்டுமே பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து சென்னையில் ஒரு  திருமண வரவேற்பு நடத்தவிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் புதுமண தம்பதி தங்கள் திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கின்றனர். அதை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கீர்த்தி பாண்டியன், தும்பா மற்றும் அன்பிற்கினியால் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் அசோக் செல்வனுடன் ப்ளூ ஸ்டார் படத்தில் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement