செப்டம்பர் 13, புதுடெல்லி (New Delhi): இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் என்றார் காந்தி. அந்த கிராமங்களை நகரங்களுடன் இணைக்க ஆதாரமாய் விளங்குவது தலைசிறந்த சாலைகள். இந்தியாவில் உள்ள பெரும்பாலான சிற்றூர்களில் இருந்து பெரு நகரங்கள் வரை சாலை போக்குவரத்து மூலமாக பயன்பெற்றுள்ளன.
மலைப்பகுதியில் அமைந்துள்ள சில கிராமங்களில் இன்றளவும் சாலை வசதி இல்லை எனினும், அவைக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் தரம் தொடர்பான விவகாரத்தில், மத்திய அரசு சமீபத்தில் அதன் ஆயுள் காலங்களை குறைத்து, பழைய வாகனங்களை உடைப்பு போடும் சட்டத்தினை கொண்டு வந்தது.
அதேபோல, வாகனங்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்புக்காக, கார்களுக்கு முன்புறம் பொருத்தப்பட்டு இருந்த பம்பர்கள் அனைத்தும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் மிகத்தீவிரமாய் அகற்றப்பட்டன. மத்திய அரசும் தமிழ்நாடு அரசின் அம்முயற்சியை வெகுவாக பாராட்டியது. Shocking Video: குழந்தைகள் காப்பகத்தில் கொடூரம்; சிறார்களை செருப்பால் தாக்கும் பெண் நிர்வாகி.!
கார்களில் கூடுதல் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக் பொருத்தும் நடவடிக்கை குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. கார்களில் 6 ஏர்பேக் பயன்பாடு என்பது கலவையான கருத்துக்களை பதிலாக பெற்று வந்தன.
இந்நிலையில், மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, கார்களில் 6 ஏர்பேக் விதிமுறை என்பது கட்டாயமாக்கப்படமாட்டாது என தெரிவித்துள்ளார். அதேபோல, பாரத் (இந்திய) கார் மதிப்பீட்டு விதிமுறைகள் பாதுகாப்புக்கு போதுமானது எனவும் அவர் தெரிவித்தார்.