E Cigarette Caution: இ-சிகிரெட்டால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் இவ்வுளவா?.. அலட்சியமாக கூட தப்பு பண்ணிடாதீங்க.!
E Cigarette (Photo Credit: Pixabay)

டிசம்பர் 28, சென்னை (Chennai): போதைப்பழக்கம் உடலுக்கு கேடு தரும் என கூப்பாடு போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அலட்சியம் மற்றும் அதீத தைரியம் போன்றவை இளம் தலைமுறையை (Cigarette Dangerous) அப்பழக்கத்திற்கு தொடர் அடிமையாக்கி, அவர்களின் எதிர்காலத்தினை கேள்விக்குறியாக்குகிறது. இன்றளவில் இ-சிகரெட் பயன்பாடு என்பது திரைமறைவில் வெகுவாக அதிகரித்து இருக்கின்றன. அமெரிக்காவில் இ-சிகிரெட் பழக்கத்தால் ஏற்படும் உடல்நலக்குறைவு காரணமாக ஆண்டுக்கு இலட்சக்கணக்கான இளைஞர்கள் உயிரிழப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் இவைக்கு தடை இருப்பினும், திரைமறைவில் சட்டவிரோதமாக கடத்தி கொண்டு வரப்படுகிறது.

மரணத்தை ஏற்படுத்தும் புகைப்பழக்கம்: சாதாரண சிகிரெட்டில் உள்ள நிக்கோட்டினை போல, இ-சிகிரெட்டிலும் இடம்பெற்றுள்ள நிகோடின் உடல் பாதிப்புகளை வெகுவாக அதிகரிக்க செய்யும். இந்த தகவலை உலக சுகாதார அமைப்பும் உறுதி செய்துள்ளது. இ-சிகிரெட்டில் இருக்கும் நச்சுப்பொருட்கள், அபாயகரமான புற்றுநோய், இதயநோய், நுரையீரல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது ஆகும். இவை இ-சிகிரெட் குடிப்போரின் மூச்சுக்குழாயில் ஊடுருவி நுரையீரலில் தாங்கும். நுரையீரலை விட்டு நீங்காது இருக்கும் நிகோடின் இருமல், மூச்சுத்திணறல், சோர்வு மற்றும் நெஞ்சு வலியை ஏற்படுத்தி மரணத்தை வழங்கும். Paytm Recap 2023: புதிய உச்சத்தை தொட்ட பேடிஎம் பயன்பாடு; காலாண்டில் மட்டும் இவ்வுளவு விஷயங்கள் நடந்துள்ளதா?..! விபரம் இதோ.! 

இ-சிகரெட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த தகவல் பின்வருமாறு.,

கவனச்சிதறல் உண்டாகும்: பதின்ம வயதுள்ள இளம் சிறார்கள் மற்றும் இளைஞர்களின் மூளை வளர்ச்சிக்கு நிக்கோட்டின் பெரும் தடையாக இருக்கும். சிகிரெட்டில் இருக்கும் நிகோடின் மூளைக்கு தீங்கு விளைவித்து, நமது கற்றல் திறனையும் பாதிக்கிறது, கவனச் சிதறலை உண்டாக்குகிறது.

கர்ப்பிணி பெண்ணின் கரு வரை பாதிக்கும்: இ-சிகிரெட் பயன்படுத்துவோர், நிக்கோட்டினை தவிர்த்து ஏரொசோலில் டயசோதைல் ரசாயனம் குறித்து அறிவது இல்லை. இந்த ரசாயனம் நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாய் அலர்ஜிக்கு முதல் காரணமாக அமையும். இதனால் ஆஸ்துமா ஏற்பட்டு, உடல் நலன் கடும் மோசமாகும். கர்ப்பிணி பெண்கள் மட்டுமல்லாது அவர்களின் கருவில் உள்ள குழந்தையையும் இது பாதிக்கும். இதனால் ஏற்படும் பாதிப்பை தடுக்க மூச்சுப்பயிற்சி செய்யலாம். பலூன் ஊதியும் பயிற்சி எடுக்கலாம்.

Smoking Kills | E Cigarette (Photo Credit: LatestLY / Pixabay)

மரணமே பரிசு: இதயத்தில் இருக்கும் இரத்த நாளங்கள் சேதப்படுத்தப்பட்டு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் தொடர்பான பிரச்சனைகளையும் இ-சிகிரெட் விரைந்து ஏற்படுத்தும். நிக்கோட்டின் நச்சு காரணமாக உடலில் சேரும் நச்சு, தனது வீரியத்தை மெல்லமெல்ல அதிகரிக்கும்போது அதிக கவலை, மனச்சோர்வு ஏற்படும். Tamil Cinema's Stalwart Vijayakanth: அஜித் முதல் ஜெயலலிதா வரை... மிரட்டிய விஜயகாந்த்..! 

புகைப்பழக்கத்தை கைவிட ஆலோசனை: நிக்கோட்டின் பயன்பாடு காரணமாக புகைப்பழக்கத்தை நிறுத்த முயற்சித்தாலும், அதற்கு நிகோடின் இடம் அளிக்காது. இதனால் மீண்டும் நம்மை புகைக்க வைத்து, நிக்கோட்டினை உடலில் இழுத்துக்கொள்ளும். இதுவே பின்னாளில் புகை பிடிக்காமல் தன்னால் ஒரு வேளை கூட இருக்க இயலாது என்ற சூழலுக்கு அடிமையாக்கி பல உடல்நலக்கோளாறுகளை ஏற்படுத்தும். புகைப்பழக்கத்தை தவிர்க்க, அது சார்ந்த நினைவுகள் வரும்போது கிராம்பு, ஏலக்காய் போன்றவற்றை வாயில் ஒதுக்கி வைத்துக்கொள்ளலாம்.

காதல் எப்போதும் மாற்றத்தை தரும்: இனிமையான பாடல்களை கேட்டு மனதை மாற்ற முயற்சிக்கலாம். உடற்பயிற்சி செய்து நமது உடல்நலனை பாதுகாக்கலாம். நீர் குடிப்பதாலும், திடீரென தோன்றும் புகைக்கும் எண்ணம் குறையும். நம் மீது நம்பிக்கை வைத்துள்ள அன்பு உள்ளங்களை தேடினால், அவர்கள் மீது நீங்கள் வைக்கும் பாசம் புகைப்பழக்கத்தை மறக்க வைக்கும்.

அதீத எச்சரிக்கை இவர்களுக்குத்தான்: புகைப்பழக்கம் கொண்டவர்களை விட, அவர்களுடன் சிரித்து பேசிக்கொண்டிருக்கும் நபர்களுக்கும் புகை புற்றுநோயை ஏற்படுத்தலாம். ஆகையால் புகைப்பழக்கம் கொண்ட நண்பன் புகைத்துக்கொண்டு இருந்தால், எட்டடி தள்ளிச் செல்வது சாலச்சிறந்தது.