Prabhas FB Hacked: நடிகர் பிரபாஸின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தை முடக்கிய ஹேக்கர்கள்; ரசிகர்கள் அதிர்ச்சி.!

பாகுபலிக்கு பின் பிரபாஸின் நடிப்பில் வெளியான சில படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை. எதிர்பார்ப்பு காரணமாக வசூலை மட்டுமே குவித்தது.

Actor Prabhas FB Account Hacked (Photo Credit: Facebook)

ஜூலை 28, ஹைதராபாத் (Cinema News): தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் பிரபாஸ். இவர் கடந்த 2002ம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான வர்ஷம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

அதனைத்தொடர்ந்து, தெலுங்கு மொழியில் வெளியான பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்த பிரபாஸ், கடந்த 2015ல் இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலியுடன் இணைந்து பாகுபலி படத்தில் நடித்ததை தொடர்ந்து இந்திய அளவில் அறியப்பட்டார்.

பாகுபலி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, பாகுபலி படத்தின் 2ம் பாகமும் நல்ல வெற்றியை அடைந்தது. வசூலில் ஆயிரம் கோடிகளை கடந்து மாபெரும் சாதனை படைத்தது. UP Govt School: மாணவ – மாணவிகள் முன்பு அரைகுறை ஆடையுடன் போதையில் படுத்து உறங்கிய தலைமை ஆசிரியர்; அரசு பள்ளியில் அதிர்ச்சி.!

தற்போது நடிகர் பிரபாஸ் சர்வதேச அளவில் அறியப்படும் நடிகரில் ஒருவராக இருக்கிறார். பாகுபலிக்கு பின் இவரின் நடிப்பில் வெளியான சில படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை. எதிர்பார்ப்பு காரணமாக வசூலை மட்டுமே குவித்தது.

கே.ஜி.எப் பட இயக்குனர் பிரசாந்த் நீலுடன் சேர்ந்து சலார் படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், நடிகர் பிரபாஸின் முகநூல் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. அதனை மீட்கும் பணியில் தொழில்நுட்ப குழு ஈடுபட்டுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement