Nayanthara Celebrates 41st Birthday (Photo Credit : @VishnuEdavan1 X)

நவம்பர் 18, சென்னை (Cinema News): தமிழ்த் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டார் (Lady Superstar) என வருணிக்கப்படும் நயன்தாரா (Nayanthara), கடந்த 2022ம் ஆண்டு தனது காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை (Vignesh Shivan) கரம்பிடித்து, தற்போது 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். கடந்த 2003ம் ஆண்டு தமிழில் ஐயா, சந்திரமுகி ஆகிய படங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றியை அடைந்த நயன்தாரா, தொடர்ந்து கடின உழைப்பால் முன்னணி பெற்றார். விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடனும் நடித்து வரவேற்பு பெற்றவர், தற்போது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். OPPO Find X9 Series: இந்தியாவில் அறிமுகமானது ஓப்போ பைண்ட் X9 சீரிஸ்.. விலை எவ்வளவு?.. சிறப்பம்சங்கள் இதோ.!

நயன்தாராவின் 41வது பிறந்தநாள்:

படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் நடிகை நயன்தாரா தனது குடும்பத்துடன் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செல்வதும் வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் கேரளா மற்றும் வட மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கும் சென்று ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த நிலையில் நயன்தாரா தனது 41வது பிறந்த நாளை முன்னிட்டு நள்ளிரவில் குடும்பத்துடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை சிறப்பித்தார். அவரின் பிறந்த நாளை ஒட்டி 'HI' படக்குழு சிறப்பு போஸ்டரையும் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. படக்குழு வெளியிட்ட போஸ்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் புகைப்படங்களுக்கு இடையே நயன்தாரா நிற்பது போன்று புகைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்டர் தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது. இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் கதாநாயகனாக நடிக்க இப்படம் தயாராகி வருகிறது.

நடிகை நயன்தாராவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த Hi படக்குழு: