Rajinikanth Upcoming Film Update: பாலிவுட் தயாரிப்பாளருடன் இணைந்து படம் நடிக்கும் ரஜினிகாந்த்; வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

நடிகர் ரஜினிகாந்தும் - பாலிவுட் தயாரிப்பாளர் சஜித்தும் இணைந்து இருக்கின்றனர். விரைவில் ரஜினிகாந்த் ஹிந்தி படம் ஒன்றில் நடிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Rajinikanth with Sajid Nadiadwala (Photo Credit: @taran_adarsh X)

பிப்ரவரி 27, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகவும், இந்திய திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவராகவும் இருப்பவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரின் திரையுலக பயணத்திற்காக மத்திய அரசு பல விருதுகளை வழங்கி கௌரவித்தது. தனது அசத்தலான நடிப்பு மூலமாக கோடிக்கணக்கான நெஞ்சங்களை ரசிகர்களாக உருவாக்கிய ரஜினிகாந்த், இன்று வரையிலும் தொடர்ந்து படங்களில் அடுத்தடுத்து 40 ஆண்டுகளை கடந்து நடித்து வருகிறார். Santhanam Next Movie Update: அப்படிப்போடு.. சந்தானத்தின் அடுத்த படம் பெயர் என்ன?.. வெளியிடும் கமல் ஹாசன்.. ரசிகர்கள் கொண்டாட்டம்.!

பாலிவுட் படத்தில் நீண்ட ஆண்டுகளுக்கு பின் ரஜினி: சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ஏகபோக ஹிட் அடித்தது. அதனைத்தொடர்ந்து, தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் வெளியான லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்திலும் நடித்து கொடுத்திருந்தார். இந்நிலையில், பாலிவுட் தயாரிப்பாளர் சஜித் நாடிஅட்வாலா நேரில் சந்தித்துக்கொண்டனர். நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. Shocking Video: திடீரென திரும்பிய மின்சாரம்; மின் ஊழியர் மின்சாரம் தாக்கி படுகாயம்.. சுருண்டு கீழே விழுந்த பதைபதைப்பு சம்பவம்.! 

விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு: இதன் வாயிலாக நடிகர் ரஜினிகாந்த், சஜித்தின் தயாரிப்பில் உருவாகும் படம் ஒன்றில் ஹிந்தி மொழியில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் பிற மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படும் என்பதால், ரசிகர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கின்றனர். விரைவில் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்படும்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement