பிப்ரவரி 27, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் காமெடி சூப்பர்ஸ்டார் என்று வணிக்கப்பட்டு வந்த நடிகர் சந்தானம் (Santhanam), கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து கதாநாயனாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். ஒருகாலத்தில் படத்தில் சந்தானம் நடிக்கிறார் என்றாலே, வயிறு குலுங்கி சிரிக்கும் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என பலரும் குடும்பத்துடன் சென்று விரும்பி படம் பார்த்தார்கள். தமிழகம் முழுவதும் அவருக்கான வரவேற்பு என்பது இருந்தது.
மீண்டும் தனது பாணியில் சந்தானம்: திரையில் நாயகனாக அறிமுகமான சந்தானத்திற்கு தில்லுக்கு துட்டு திரைப்படம் நல்ல வெற்றியை வழங்கியது. அதனைத்தொடர்ந்து வெளியான படங்கள் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. ஏ1, டிக்கிலோனா, சபாபதி, டிடி ரிட்டன்ஸ் ஆகிய படங்கள் வெற்றியை அடைந்தன எனினும், சொல்லிக்கொள்ளும் அளவு வரவேற்பு இல்லை. ஒருகாலத்தில் கவுண்டமணிக்கு அடுத்த இடத்தை தனதாக்கிய சந்தானத்தின் காமெடிக்கு படத்திற்கு சென்றவர்கள், படத்தில் காமெடி இல்லாமல் ஏமாற்றம் அடைந்தனர். Shocking Video: திடீரென திரும்பிய மின்சாரம்; மின் ஊழியர் மின்சாரம் தாக்கி படுகாயம்.. சுருண்டு கீழே விழுந்த பதைபதைப்பு சம்பவம்.!
அடுத்த படம் என்ன? அந்த விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் நீண்ட இடைவெளிக்கு பின் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் சந்தானம் நடிப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், பிப்ரவரி 28ம் தேதியான நாளை சந்தானத்தின் புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகிறது.
ரசிகர்கள் உற்சாகம்: ஜி.என் அன்புசெழியனின் - சுஸ்மிதா அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் திரைப்படத்தில், நாயகனாக சந்தானம் நடிக்கவுள்ளார். படத்தின் பிற அறிவிப்புகள் அனைத்தும் நாளை காலை 10:30 மணியளவில் நடிகர் கமல் ஹாசன் வெளியிடும் படத்தின் தலைப்பு போஸ்டரில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Excitement at its PEAK💥
The Title & First Look of my next will be released by the connoisseur of Indian Cinema🤩 #Ulaganayagan @ikamalhaasan sir 😇 Tomorrow(28th Feb) at 10:30 AM🔥
Presented by the One & Only @gopuramfilms #GNAnbuchezhian sir, Produced by #SushmitaAnbuchezhian… pic.twitter.com/WfyGNGkOWe
— Santhanam (@iamsanthanam) February 27, 2024