Electrocuted Attack (Photo Credit: @TeluguScribe X)

பிப்ரவரி 27, நாராயணபேட் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நாராயணபேட் மாவட்டம், சரப் பஜார் பகுதியில் நேற்று மின்சார கோளாறு காரணமாக பராமரிப்பு பணி நடைபெற்றுள்ளது. அச்சமயம், அலாவுதீன் என்ற கடைநிலை ஊழியர், மின்மாற்றியில் மின்சாரத்தை துண்டித்து சீரமைப்புகளில் ஈடுபட்டுள்ளார். Shafiqur Rahman Barq Passes Away: சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்.. சர்ச்சைக்கு பெயர்போன அரசியல் புள்ளியுமான எம்.பி காலமானார்..! 

மின்சாரம் தாக்கி படுகாயம்: அச்சமயம் எதிர்பாராத விதமாக மின்சாரம் திரும்பியதாக (Power Return) தெரியவருகிறது. இதனால் ஏணியின் உதவியுடன் மின்கம்பியில் இருந்து பணியாற்றிக்கொண்டு இருந்த அலாவுதீன், சுருண்டு கீழே விழுந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள், பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். Road Accident 5 Died: லாரியின் பின்னால் சொருகி உருக்குலைந்த கார்; 5 தொழிலாளர்கள் பரிதாப பலி.! 

கவனம் தேவை: தலை மற்றும் முகத்தில் காயத்துடன் இருந்த அலாவுதீனுக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயம் தொடர்பாக துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது. மின்சார வேலைகள் செய்யும் ஊழியர்கள் கவனமுடன் பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.