Vijay Car Traffic Violence: சாலை விதிகளை மீறிய நடிகர் விஜய்க்கு ரூ.500 அபராதம் விதித்த போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள்.!

தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்த நடிகர் விஜயின் கார் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதால் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

Vijay Traffic Violence (Photo Credit: Twitter)

ஜூலை 12, சென்னை (Cinema News): லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்த திரைப்படத்திற்கு பின் விஜய்க்கு அடுத்தடுத்த படங்கள் நடிக்க காத்திருக்கின்றன.

ஆனால், விஜய் தற்போது தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை, நற்பணிகள் என்று இருந்து வருகிறார். இது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்வதாக பலரும் தெரிவித்து வந்தனர்.

அதற்கு ஏற்றாற்போல 234 தொகுதிகளிலும் பத்து மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் 3 மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவியர்களுக்கு பரிசு வழங்கினார். UP Shocker: நிச்சயிக்கப்பட்டு நின்றுபோன திருமணம்; ஆத்திரத்தில் இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற இளைஞன்..!

இதனைத்தொடர்ந்து, பனையூர் விஜய் அலுவலகத்தில் கடந்த 2 வாரங்களாக மாவட்ட வாரியாக விஜய் தனது மக்கள் மன்றத்தினரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்றும் அதனைப்போல ஆலோசனை நடந்தது.

இந்நிலையில், நடிகர் விஜய் பயணம் செய்த கார் நீலாங்கரை சிக்னலில் நிற்காமல் சென்றதால், அவரின் காருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கின்றன.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement