Anicka Vijayi Vikramman (Photo Credit: Instagram)

மார்ச் 07 (Cinema News): கர்நாடக (Karnataka) மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பிரபல மலையாளம் மற்றும் தமிழ் (Malaiyalam & Tamil Actress) நடிகை அனிகா விஜய் விக்ரமன் (Anicka Vijayi Vikramman). இவர் கடந்த 2017ம் ஆண்டே திரைத்துறைக்கு பரிட்சயமானாலும், 2021ல் வெளியான எங்க பாட்டன் சொத்து, ஐ.கே.கே (IKK), 2022ல் வெளியான விஷமக்காரன் போன்ற படங்களின் மூலமாக முன்னணி நடிகையாக உயர்ந்து வந்தார். இவர் கேரளாவை சேர்ந்த அனூப் பிள்ளை (Anoop Pillai) என்பவரை காதலித்து வந்துள்ளார். எப்போதும் இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் கவர்ச்சியான போட்டோக்கள் பதிவிடுவதையும் அவர் வழக்கமாக வைத்திருந்தார்.

இதற்கிடையில், அவர் கடந்த ஜனவரி மாதத்திற்கு பின்னர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்கள் எதுவும் பதிவிடவில்லை. அவர் குறித்த தகவலும் மர்மத்துடன் இருந்து வந்தது. இந்த நிலையில், நேற்று தனது சமூக வலைதளப்பாக்கத்தில் நடிகை அனூப் விஜய் விக்ரமன் பகிர்ந்த புகைப்படங்கள் மற்றும் தெரிவித்த விபரங்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தின. அவர் காதலித்து வந்த அனூப் பிள்ளை, நடிகையை தாக்கி சித்ரவதை செய்த சம்பவம் வெளிஉலகிற்கு தெரியவந்துள்ளது. Tasmac Attacked: டாஸ்மாக் கடை மீது கொலைவெறி.. குடிகார தந்தைக்கு எதிராக மகன் எடுத்த ஆயுதம்.. காரைக்குடியில் பதறவைக்கும் சம்பவத்தின் உண்மை பின்னணி.!

இந்த விஷயம் தொடர்பாக நடிகை அனிகா பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எனது வாழ்க்கையில் நடந்த கசப்பான நிகழ்வுகளால் எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் தொடர்ந்து பல மிரட்டல் அழைப்புகள் பெறப்படுகின்றன. நான் இறுதியாக இணைத்துள்ள புகைப்படம் எனது முன்னாள் காதலர் என்னை தாக்குவதற்கு முன்பு எடுக்கப்பட்டன. தலைமுடி வெட்டியுள்ள போட்டோவை நான் பதிவிட ஆர்வத்துடன் இருக்கிறேன். இனி வரும் நாட்களில் பழையமாத்ரி போட்டோக்கள் பதிவிடுவேன்" என தெரிவித்துள்ளார்.

நடிகை அனீகா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் மூலமாக, அவரின் காதலரால் தாக்கப்பட்டது உறுதியான நிலையில், அதுகுறித்த விளக்கத்தையும் அறிக்கையாக அவர் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, "நான் துரதிஷ்டவசமாக தவறான அனூப் பிள்ளை எனபவருடன் உறவில் இருந்துவிட்டேன். அவர் என்னை மனரீதியாக, உடல் ரீதியாக கொடுமைப்படுத்தி, இறுதியாக சித்ரவடிகும் செய்தார். இவரைப்போன்றதொரு மோசமான மனிதரை நான் சந்தித்ததே இல்லை.

அவருடன் நான் இருந்தபோது எனக்கு பாதுகாப்பான நபராக அவர் இல்லை. பாதுகாப்பை மீறுவதற்கு பல சூழ்ச்சிகளை செய்தார். இவ்வுளவு நாட்களாக என்னை மிரட்டி வந்தார். அவருக்கு எதிராக பெங்களூரிலும், சென்னையிலும் என காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளேன். சென்னையில் எனது காலில் விழுந்து நாடகத்தனமாக மன்னிப்பு கேட்டார். எனது செல்போனில் உள்ள வாட்ஸப்பை எனக்கே தெரியாமல் லேப்டாப்பில் இணைத்து என்னை உளவுபார்த்தார். Couple Fight Suicide: மனைவியை கொலை செய்ய முயற்சித்து, பயத்தில் தற்கொலை செய்துகொண்ட கணவன்.. நள்ளிரவில் நடந்த பயங்கரம்.!

ஹைதராபாத்தில் என்னை 2 நாட்கள் பூட்டிவைத்து சித்ரவதை செய்தார். நான் அவரிடம் கெஞ்சியும் பலன் இல்லை. எனது செல்போனை கேட்டு, என்னை விட 4 மடங்கு எடை அதிகம் கொண்டவர், என் மீது அமர்ந்து சித்ரவதை செய்தார். எனது வாயை மூடி, மூச்சு விட இயலாமல் சாவை விட மேலான வலிகள் கொடுத்து துன்புறுத்தினார். அதனால் நான் எனது சுய நினைவையும் இழந்தேன். என்னை தாக்கி எப்படி நடிக்கிறாய்? என கேட்டார். என்னை சித்ரவதை செய்து பிரிந்து சென்றார்.

உடலளவிலும் - மனதளவிலும் நான் எழுந்து வர நாட்கள் பிடித்தன. நான் இப்பதிவை பதிவிடும் வரையில் எனது குடும்பத்தினருக்கும் பல உண்மைகள் தெரியாது. நான் பொதுவாக இலட்சிய நம்பிக்கை கொண்டவர். அனைவர்க்கும் இதயம் ஒன்று தான். நான் தற்போது முழுமையாக குணமடைந்துவிட்டேன். எனது தந்தையை இழந்துவிட்டேன். வாழ்க்கை குறுகியது என எனக்கும் தெரியும். நான் அனைவரையும் மன்னிக்கிறேன். மனதளவில் அனைவரும் உறுதியுடன் இருங்கள். தற்போது நான் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் தலைமறைவாக உள்ளார். விரைந்து நானும் எனது பணிக்கு வருவேன்" என கூறியுள்ளார்.