பாதிக்கப்பட்ட விற்பனை பிரதிநிதி அர்ஜுனன் | Karaikudi Tasmac Issue (Photo CreditL Twitter)

மார்ச் 07, காரைக்குடி (Sivaganga News): சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி (Karaikudi, SIvaganga), பள்ளத்தூர் கிராமம் கடைவீதி தெருவில் அரசு மதுபானக்கடை (Tasmac) செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் மேற்பார்வையாளராக பூமிநாதன் என்பவரும், விற்பனையாளர்களாக பாஸ்கரன் மற்றும் அர்ஜுனன் ஆகியோரும் பணியாற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 3ம் தேதி இரவு 10 மணியளவில் கடையை அடைக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. கடையின் கணக்கு வழக்குகள் பணி தொடர்ந்ததால், பாதியளவு கதவு அடைக்கப்பட்டு கணக்கு பணிகள் நடைபெற்று வந்துள்ளன. அச்சமயம் அங்கு வந்த மர்ம நபர், திடீரென பெட்ரோல் குண்டை எடுத்து கடைக்குள் வீசிவிட்டு மாயமாகினார்.

பெட்ரோல் குண்டு தாக்குதல் சம்பவத்தில் ரூ.14 ஆயிரம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள், ரூ.76 ஆயிரம் ரொக்கம் சேதமடைந்தன. விற்பனையாளர் அர்ஜுனன் பலத்த தீக்காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். விசாரணையில், கடந்த மாதம் 10ம் தேதியும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது அம்பலமானது. Theni Bus Accident: அரசு பேருந்தா? தனியார் பேருந்தா?.. முந்திசெல்வதில் போட்டி.. 14 பயணிகளின் உயிருக்கு உலைவைத்த ஓட்டுனர்கள்.!

ஆனால், அன்று நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இதனையடுத்து, விசாரணையில் இறங்கிய பள்ளத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, 21 வயது இளைஞர் ராஜேஷை கைது செய்தனர். விசாரணையில், மதுபோதைக்கு அடிமையான ராஜேஷின் தந்தையால் நிம்மதியை இழந்த ராஜேஷ் மற்றும் அவரின் குடும்பத்தினர் பல துன்பங்களை சந்தித்துள்ளனர்.

தனது தந்தை உட்பட பலரும் மதுபானக்கடையால் குடும்பத்தினருக்கு பல தொந்தரவுகள் செய்வதை உணர்ந்த ராஜேஷ், ஆத்திரத்தில் ஆயுதத்தை கையில் எடுத்து மதுபானக்கடையை மூடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன்படி, பெட்ரோல் குண்டு தயாரித்து 2 முறை கடையின் மீது வீசியுள்ளார். முதல் முறை தப்பினாலும், இரண்டவது முறை அவரும் சேர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜேஷ், சிகிச்சைக்கு பின்னர் கைது செய்யப்படுவார் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். டாஸ்மாக் கடையை மூட மேற்கூறிய செயல்போன்ற வன்முறை தீர்வாகத்து என்பதை இளைஞர்கள் அறிந்து சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதே டாஸ்மாக் கடை எதிர்ப்பாளர்களின் ஆதங்க குரலாக இருக்கிறது.