Deepika Padukone Pregnant? நடிகை தீபிகா படுகோன் கர்ப்பமா?.. தீயாய் பரவும் வீடியோவை வைத்து வாழ்த்துகளை குவித்துத்தள்ளும் ரசிகர்கள்.!
2018ல் தனது அன்பு காதலரை கரம்பிடித்த நடிகை தீபிகா படுகோன், தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். கடந்த ஆண்டில் 2 படங்களில் ஷாரூக்கானுடன் கைகோர்த்து மெகா ஹிட் வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தார்.
பிப்ரவரி 20, இலண்டன் (Cinema News): இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தீபிகா படுகோன் (Deepika Padukone), ஹிந்தி மட்டுமல்லாது ஆங்கில மொழிகளில் வெளியாகும் ஹாலிவுட் படத்திலும் நடித்து உலகளவில் அங்கீகாரத்தை பெற்ற இந்திய நடிகைகளின் முக்கிய நடிகையா ஆவார். கடந்த 2005 ஆம் ஆண்டு தொடங்கிய இவரின் திரையுலக பயணம், தற்போது வரை வெற்றிகரமாக இருந்து வருகிறது. பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளன. Global Wake up Report: இந்தியர்கள் சராசரியாக காலை எழுந்துகொள்ளும் நேரம் தெரியுமா?.. அசத்தல் ரிப்போர்ட் இதோ.!
பல ஹிட் படங்கள்: கடந்த ஆண்டு ஷாருக்கானுடன் இணைந்து ஜவான், பதான் என இரண்டு மெகா பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து அசத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து, சமீபத்தில் வெளியான பைட்டர் படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் நடித்து இருந்தார். நடப்பு ஆண்டில் கல்கி ஏடி, சிங்கம் எகைன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகை தீபிகா படுகோன், ஹிந்தி நடிகர் ரன்வீர் கபூரை திருமணம் செய்து கொண்டார். US Russian Women Arrested: உக்ரைன் இராணுவத்திற்கு நிதி வழங்கியதாக, அமெரிக்கா - ரஷியா குடியுரிமை பெற்ற பெண் ரஷியாவில் கைது..!
தீபிகா கர்ப்பமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு: தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில், தற்போது இவர் லண்டனில் நடைபெறும் 77 ஆவது பிரிட்டிஷ் திரைப்பட அகாடமி விருதுகள் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இவர் விமான நிலையத்திலிருந்து வெளியே சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிய வருகிறது. இது தொடர்பான தகவல் செய்தியாக பரவி ரசிகர்களின் வாழ்த்து மழையை பொழியவைத்துள்ளது. ரன்வீர் கபூர் - தீபிகா படுகோன் தம்பதி விரைவில் குழந்தையை பெற்றெடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் அதே வேளையில், சம்பந்தப்பட்டவர்களின் தரப்பில் இருந்து தற்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
Deepika Padukone slaying the airport look with those killer sunglasses 😎 as she comes back from BAFTA
.
.#DeepikaPadukone #Airportspotting #BollywoodSpotting, #IF #IndiaForums@deepikapadukone pic.twitter.com/qRHuF8ljKk
— India Forums (@indiaforums) February 20, 2024
(The above story first appeared on LatestLY on Feb 20, 2024 03:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

