பிப்ரவரி 20, மாஸ்கோ (World News): ரஷ்யா - உக்ரைன் போரின் காரணமாக உலகளாகிய பதற்றம் அதிகரித்து, ரஷியாவுக்கு எதிரான செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டாலும் அந்நாடு அதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தனது போரை வழிநடத்தி வருகிறது. சமீபத்தில் விளாடிமிர் புதின் தலைமையிலான ரஷ்ய அரசால் தேசத்துரோகி என்று குற்றம் சாட்டப்பட்ட, அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி சிறைவாசத்தின்போது உயிரிழந்தார். இந்நிலையில், ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு சேவை அமைப்பின் சார்பில், உக்ரைன் இராணுவத்திற்கு நிதிஉதவி செய்து வந்ததாக, தேசத்துரோக வழக்கில் அமெரிக்கா - ரஷியா குடியுரிமை கொண்ட லாஸ் ஏஞ்சல்ஸ் பெண் ஒருவரை கைது செய்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண்மணியின் விபரம் தெரிவிக்கப்படவில்லை. Global Wake up Report: இந்தியர்கள் சராசரியாக காலை எழுந்துகொள்ளும் நேரம் தெரியுமா?.. அசத்தல் ரிப்போர்ட் இதோ.!
JUST IN - Russia's FSB security services said they had arrested a Los Angeles woman, with US-Russian citizenship on suspicion of treason for funding the Ukrainian army, Russian state media reported.
— Insider Paper (@TheInsiderPaper) February 20, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)