பிப்ரவரி 20, Chennai (சென்னை): உலகளவில் மனிதனில் தொடங்கி ஒவ்வொரு உயிரினமும் தனது உழைப்புக்கு பின்னர் ஓய்வு எடுப்பது இயல்பு. உலகின் ஒரு துருவத்தில் உதயமாகும் சூரியன், மறு துருவத்தில் மறைகிறது. இவ்வாறாக சுழற்சி முறையில் இயங்கும் பூமியும் - சூரியனும் சேர்ந்து இரவு - பகலை தோற்றுவித்து காலங்களை நகர்த்துவதனால் உறக்கம் ஒவ்வொரு உயிருக்கும் இயற்கையாக அமைகிறது. உறக்கம் என்ற விஷயம் இல்லாத பட்சத்தில், உடல் உழைப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு ஆற்றல் இழப்பு மிகப்பெரிய பிரச்சனையாக அமைந்து இருக்கும்.
காலை விழிப்பது எப்போது? உயிரினங்களின் உறக்கம் அவற்றின் எதிர்கால வளர்ச்சிக்கும் உதவி செய்கிறது, உடல் முன்னேற்றத்திற்கும் இன்றியமையாத செயலக அமைகிறது. இந்நிலையில், சர்வதேச அளவில் உள்ள பல நாடுகளில் மனிதர்கள் சராசரியாக விழித்துக்கொள்ளும் நேரம் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, தன்னகத்தே பல அரசியல் பிரச்சனை, வளர்ச்சி, உள்நாட்டுப்போர் என தவித்து வரும் தென் ஆப்பிரிக்க மக்கள் 06:24 மணிக்கு காலையில் சராசரியாக அனைவரும் எழுந்துவிடுகின்றனர். அதனைத்தொடர்ந்து கொலம்பியாவில் 06:31 மணிக்கு காலையில் எழுகின்றன. HC On Terminating Women Officer On Ground Of Marriage: திருமணத்தை காரணம்காட்டி பெண் பணிநீக்கம் செய்யப்பட்டது தவறானது - ரூ.60 இலட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
07.30 க்கு மேல் எழுந்துகொள்ளும் இந்தியர்கள்: கோஸ்டா ரிக்காவில் காலை 06:38 மணிக்கும், இந்தோனேஷியாவில் 06:55 மணிக்கும், மெக்சிகோ மற்றும் ஜப்பானில் 07:09 மணிக்கும், ஆஸ்திரேலியாவில் 07:13 மாணிக்கம், அமெரிக்காவில் 07:20 மணிக்கும், சுவீடனில் 07:21 மணிக்கும், ஜெர்மனியில் 07:25 மணிக்கும், பிலிப்பைன்ஸில் 07:28 மணிக்கும், பிரேசிலை 07:31 மணிக்கும், இங்கிலாந்து & கனடாவில் 07:33 மணிக்கும், இந்தியாவில் 07:36 மணிக்கும், தென் கொரியாவில் 07:38 மணிக்கும், மலேஷியாவில் 07:41 மணிக்கும், சீனாவில் 07:42 மணிக்கும், அமீரகத்தில் 07:43 மணிக்கும், பிரான்சில் 07:51 மணிக்கும், இத்தாலியில் 07:52 மணிக்கும், துருக்கியில் 08:02 மணிக்கும், ஸ்பெயினில் 08:05 மணிக்கும், சவூதி அரேபியாவில் 08:27 மணிக்கும் எழுந்துகொள்கின்றனர்.
இத்தரவுகள் அனைத்தும் நாட்டு மக்களின் தொகையை சராசரியாக எடுத்துக்கொண்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.