டிசம்பர் 06, மும்பை (Cinema News): தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh), தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். மேலும், ‘தெறி’ திரைப்படத்தின் ரீமேக்கான ‘பேபி ஜான்’ படம் மூலம் இந்தியிலும் அறிமுகமாக இருந்தார். நடிகை கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக ஏற்கனவே பல தகவல்கள் வெளி இருந்தன. KS Ravikumar Mom Passes Away: இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தாயார் மரணம்.. திரைத்துறையினர் இரங்கல்..!
திருமண அழைப்பிதழ்:
இதனிடையே, வரும் டிசம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதி கோவாவில் கீர்த்தி சுரேஷின் திருமணம் நடைபெறும் என தகவல்கள் கசிந்திருந்த நிலையில், அவர்களின் அழைப்பிதழ் தற்போது வெளியாகியுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷும், ஆண்டனியும் (Antony Thattil) கடந்த 15 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.இருவரும் ஒரே பள்ளியில் படித்த நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறியுள்ளனர். Pushpa 2 Stampede: அல்லு அர்ஜுனை பார்க்க அலைமோதிய கூட்டம்.. நெரிசலில் சிக்கி பெண் பலி..!
துபாய் தொழிலதிபர்:
இருவீட்டார் சம்மதத்துடன் கோவாவில் திருமணம் நடைபெறுகிறது. தொழிலதிபரான ஆண்டனி தட்டில், கேரளாவில் உள்ள ரெசார்ட் உரிமையாளர் ஆவார். துபாயில் தொழிலதிபராக இருக்கிறார். இதனால் திருமணம் முடிந்தால் நடிகை கீர்த்தி சுரேஷ் துபாயில் செட்டிலாகிவிடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி ஜோடியின் திருமண அழைப்பிதழ்:
🌟 Wedding bells are ringing! 💒 #KeerthySuresh & #Antony’s love story reaches its beautiful destination on Dec 12th! ❤️
Stay tuned for every enchanting detail! #KeerthyAntonyWedding pic.twitter.com/ySARSVkHBD
— KLAPBOARD (@klapboardpost) December 4, 2024