Pushpa 2 Stampede (Photo Credit: @PTI_News X)

டிசம்பர் 05, ஐதராபாத் (Cinema News): தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் (Hyderabad) ஆர்டிசி கிராஸ் சாலையில் உள்ள சந்தியா தியேட்டரில் நேற்று இரவு புஷ்பா 2 தி ரூல் (Pushpa 2 The Rule) படத்தின் பிரீமியர் ஷோவின் போது, ​​கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா 2 தி ரூல் இன்று உலகம் முழுவதும் திரையில் வெளியானது. இந்நிலையில், நேற்று இரவு பிரீமியர் ஷோவின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 39 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், அவரது மகன் கூட்டத்தில் மயங்கி விழுந்தார். Pushpa 2: புஷ்பா 2 படத்தில், அல்லு அர்ஜுன் என்ட்ரி காட்சிகள் கசிந்தது; லீக் வீடியோ வைரல்.. படக்குழு அதிர்ச்சி.!

உடனே அங்கிருந்த காவல் அதிகாரிகள் சிறுவனை மீட்டு, சிபிஆர் சிகிச்சை அளித்து பின்னர் சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. சிறுவனின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வீடியோ இதோ: