டிசம்பர் 05, சைதாப்பேட்டை (Cinema News): தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் (Director KS Ravikumar), 1990-யில் ‘புரியாத புதிர்’ படத்தில் தொடங்கி அடுத்தடுத்து முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் என பல நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். கே.எஸ். ரவிக்குமார் தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், அவர் தயாரிப்பாளராகவும் சில படங்களை தயாரித்து வருகிறார். Pushpa 2 Stampede: அல்லு அர்ஜுனை பார்க்க அலைமோதிய கூட்டம்.. நெரிசலில் சிக்கி பெண் பலி..!
இந்நிலையில், கே.எஸ்.ரவிக்குமாரின் தயார் ருக்மணி அம்மாள் (88 வயது), வயது மூப்பு காரணமாக வரும் உடல்நல பிரச்சனைகளுக்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், நேற்று (டிசம்பர் 04) மாலை மரணமடைந்தார். மேலும், அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை 2.30 மணிக்கு இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் வீடு அமைந்துள்ள சைதாப்பேட்டையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கே எஸ் ரவிக்குமாருக்கு ஆறுதல் தெரிவித்து, அவருடைய தாயாருக்கு தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.