டிசம்பர் 25, மெல்போர்ன் (Malborne): ஆஸ்திரேலியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களுள் முக்கியமானவர் கிளன் மேக்ஸ்வெல் (Glenn Maxwell). தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக நிற்கும் கிளன், நாடுகளை கடந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ஆவார். 2023 உலகக்கோப்பை தொடரில் கிளன் தனது சிறப்பான ஆட்டத்தால் ரசிகர்கள் மகிழ்வித்தார். அந்த அணிக்கும் வெற்றி கிடைத்தது.
மகனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: இவரின் மனைவி வினி ராமன் (Vini Raman), இந்திய வம்சாவளி ஆவார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று முடிந்தது. தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 11ம் தேதி இருவருக்கும் அழகிய ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. இந்நிலையில் தற்போது தம்பதிகள் இருவரும் தங்களது மகனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Infant Boy Found Ladies Washroom: பிறந்து 7 நாட்கள் ஆகும் குழந்தையை பொதுக்கழிவறையில் விட்டுச்சென்ற இளம்பெண்; காரணம் என்ன?.. ஜோடிக்கு வலைவீசும் காவல்துறை.!
Glenn Maxwell celebrating the Christmas with his son ..!!pic.twitter.com/EFZpetwerQ
— Haroon 🏏🌠 (@Haroon_HMM7) December 24, 2023
மகளுடன் டேவிட் வார்னர் வாழ்த்து: அதேபோல, ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் (David Warner), தனது மகன் ஈஷாவுடன் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராம் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. விரைவில் ஐபிஎல் 2024 போட்டிகள் தொடங்கவுள்ளன. இந்த போட்டியில் சன் ரைஸஸ் ஹைதராபாத் அணியில் டேவிட் வார்னரும், கிளன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிலும் இடம்பெற்றுள்ளனர். ஹைதராபாத் அணியை டேவிட் வார்னர் கேப்டனாக வழிநடத்துகிறார்.
View this post on Instagram