Ajith Kumar Pays Last Respects To Vetri Duraisamy: வெற்றி துரைசாமியின் மரணம்.. நேரில் சென்று இரங்கல் தெரிவித்த தல அஜித்.. வைரலாகும் வீடியோ..!
Ajith Kumar Pays Last Respects To Vetri Duraisamy (Photo Credit: @ThalaAjith_FC X)

பிப்ரவரி 13, சென்னை (Chennai): திரைப்பட இயக்குநரும் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனுமான வெற்றி துரைசாமி (Vetri Duraisamy) பயணித்த கார் கடந்த ஞாயிற்றுக் கிழமை இமாச்சல பிரதேசத்தில் சட்லஜ் நதி அருகே விபத்துக்கு உள்ளானது.

வெற்றி மற்றும் கோபிநாத் (32) ஹிமாச்சலின் லாஹவுல்-ஸ்பிட்டி மாவட்டத்தில் உள்ள ஸ்பிட்டி பள்ளத்தாக்கைப் பார்வையிடச் சென்றுள்ளனர், இருவரும் ஸ்பிட்டியில் இருந்து சிம்லாவை நோக்கி ஸ்பிதியில் உள்ள தபோவில் வசிக்கும் டென்சின் ஓட்டிக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்தனர். கார் தேசிய நெடுஞ்சாலை-5ல் கட்டுப்பாட்டை இழந்து சட்லஜ் மீது விழுந்தது.

கார் கவிழ்ந்ததும், கோபிநாத் கீழே விழுந்து, பலத்த காயம் அடைந்து, கின்னூரில் உள்ள ரெக்காங் பியோவில் உள்ள பிராந்திய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, சிகிச்சைக்காக சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்தில் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் டென்சின் உயிரிழந்தார். டிரைவரின் உடலை சில மணிநேரங்களுக்குப் பிறகு தேடுதல் குழுவினர் மீட்டனர், ஆனால் வெற்றி கண்டுபிடிக்கப்படவில்லை. Valentine's Day Celebration Is Banned: சிங்கிள்ஸ் சாபம்.. காதலர் தினத்திற்கு தடை.. மீறினால் சிறை தண்டனை..!

வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு: வெற்றி துரைசாமி மாயமான நிலையில் அவரை தேடும் பணி 8வது நாளாக தொடர்ந்து நேற்று நடைபெற்றது. காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவத்தினர், ஸ்கூபா டைவிங் வீரர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மீட்பு பணியினர் ஈடுபட்டனர். இந்த நிலையில், வெற்றியின் உடல் சட்லஜ் ஆற்றில் இருந்து சடலமாக நேற்று மீட்கப்பட்டது. விபத்து நிகழ்ந்த பகுதியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் வெற்றியின் உடல் கிடைக்கப்பெற்றது. நதியின் அடியில் இருந்து வெற்றியின் உடலை ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மீட்டு கொண்டு வந்தனர்.

இன்று மாலை தகனம்: பின்னர் வெற்றியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ரெகாங்புவாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து வெற்றியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின் வெற்றி துரைசாமியின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு தொடர்ந்து கண்ணம்மாபேட்டை மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தல அஜித் இரங்கல்: இந்நிலையில் தல அஜித் குமார் (Ajith Kumar), தனது அன்பு நண்பர் வெற்றி துரைசாமி அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். இந்த வீடியோவானது தற்போது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு வெற்றி துரைசாமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “வாழ்க்கை என்பது நல்ல நண்பர்களுக்காகவும், சிறந்த சாகசங்களுக்காகவும்” என தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இதனால் அஜீத்தின் நண்பர் வெற்றி துரைசாமியின் மறைவுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் என்று அஜீத் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.