Valentine's Day Banned (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 13, சென்னை (Chennai): இந்த உலகத்திலேயே அழகானது என்றால் அது காதல் (Love) தான். ஒரு மனிதனுக்குள் காதல் வந்தால் எல்லாமே அழகாக தெரியும். உண்மையில் அதைவிட அழகு என்ன இருக்கு..!

காதலை 'கொண்டாட' ஒரு நாள் தேவையில்லை என்றாலும், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காதலர் தினம் (Valentine's Day) கொண்டாடப்படுகிறது. அந்த ஒரு நாள் மட்டும் இல்லை, அந்த வாரம் முழுவதுமே காதல் வாரமாக கொண்டாடப்படுகிறது.

இந்த நாள் அமெரிக்காவிலும் பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் உள்ள இளம் தம்பதிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இது அர்ஜென்டினா, பிரான்ஸ், மெக்சிகோ, தென் கொரியா மற்றும் இந்தியா போன்ற பிற நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பிலிப்பைன்ஸில், இந்த நாளில் பலர் திருமணம் செய்துக்கொள்வர். இந்நிலையில், குறிப்பிட்ட 5 நாடுகளில் காதலர் தினத்தை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டணை உண்டு. WhatsApp New Feature Update: இனி ஸ்பேம் தொல்லை இல்லை.. வாட்ஸ்அப்பின் சூப்பர் அப்டேட்..!

சவுதி அரேபியா: சவூதி அரேபியாவில் காதலர் தினத்தை கொண்டாடினால் கைது செய்யப்படுவார்கள் . இதனால் இளைஞர்கள் மிக மோசமாகி விடுகின்றனர் என்ற நம்பிக்கை இந்நாட்டில் காலம் காலமாக உள்ளது.

மலேசியா: மலேசியா ஒரு இஸ்லாமிய நாடு என்பதால் காதலர் தினம் கொண்டாட இங்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பாகிஸ்தான்: பாகிஸ்தானிலும் இஸ்லாமிய கருத்துக்கு எதிராக இருப்பதாக கூறி காதலர் தினம் கொண்டாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் காதலர் தினம் பாகிஸ்தானில் எங்கும் கொண்டாடப்படுவதில்லை.

உஸ்பெகிஸ்தான்: உஸ்பெகிஸ்தானில் பாபரின் பிறந்தநாளை பிப்ரவரி 14 அன்று கொண்டாடுகிறார்கள். இதன் அடிப்படையில் 2012க்குப் பிறகு அங்கு காதலர் தினம் தடை செய்யப்பட்டுள்ளது.

ஈரான்: ஈரானில் 2010ற்கு பிறகு காதலர் தினம் தடை செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள அரசு இதை தார்மீக சீரழிவு விழாவாக அறிவித்துள்ளது. அத்துடன் அங்கு காதலர் தினம் தொடர்பான பரிசுகள் மற்றும் பொருட்களை விற்பனை செய்வதும் தண்டணைக்குரிய குற்றம் ஆகும்.