2012 Thevar Jayanthi Murder | Accuse Ramar (Photo Credit: @azhagumalai_d / @pasumpon73s X)

பிப்ரவரி 20, மதுரை (Madurai Crime News): மதுரை மாவட்டத்தில் உள்ள புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த 20 நபர்கள், கடந்த 2012ம் ஆண்டு தேவர் ஜெயந்தி அன்று பசும்பொன் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். இவர்கள் அனைவரும் தங்களுக்கு சொந்தமான வேனில் பயணம் செய்துள்ளனர். மதுரை ரிங் ரோடு பகுதியில் வந்தபோது, வேனின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 20 பேரின் உடல் கருகி பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட, ஒருவர்பின் ஒருவராக 10 பேர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல் துறையினர், மதுரை மேல அனுப்பானடி பகுதியை சேர்ந்த ராமர் @ குட்டை ராமர் உட்பட 11 நபர்களை கைது செய்தனர். இவர்களின் மீது கொலை வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. Jadeja Dedicates Man of the Match Award to Wife: ஆட்ட நாயகன் விருது மனைவிக்கு அர்ப்பணிப்பு: நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஜடேஜா.! 

தலை சிதைக்கப்பட்டு கொடூர கொலை: குற்றவாளிகளின் பாதுகாப்பு கருதி வழக்கு விசாரணை 2020ல் இருந்து கரூர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், வழக்கில் முதன்மை குற்றவாளியாக கருதப்பட்ட ராமர் கரூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். பின் தனது கூட்டாளி கார்த்திகேயனுடன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்தார். இவர்கள் பயணித்த வாகனத்தை கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கும்பல் ஒன்று பின்தொடர்ந்து காரில் வந்துள்ளது. இருவரையும் தடாகோவில் நேரப்பாடி பகுதியில் வழிமறித்து தாக்குதல் சம்பவமும் நடந்துள்ளது. அரிவாள் உட்பட பயங்கர ஆயுதங்களால் நடத்தப்பட்ட சரமாரியான தாக்குதலில், ராமர் மட்டும் தலை சிதைக்கப்பட்ட நிலையில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துபோனார். கார்த்திக் மட்டும் வெட்டுக்காயத்தோடு உயிர்தப்பி இருக்கிறார். Cauliflower Mint Rice: புற்றுநோயை விரட்ட, நோயெதிர்ப்பு சக்தியை கூட்டும் காலிப்ளவர் – புதினா சாதம் செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!  

Murder | Crime File Pic (Photo Credit: Pixabay)

பழிக்குப்பழியாக நடந்த பயங்கரம்: பின் இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த அரவக்குறிச்சி காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து ராமரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கார்த்திக் காவல் துறையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சம்பவம் குறித்து விசாரணை நடத்தியபோதுதான் அவர்களுக்கு மேற்கூறிய சம்பவம் தெரியவந்தது. இதனால் பழிக்குபழிவாங்கும் விதமாக கொலை சம்பவம் நடைபெற்றது உறுதியானதை தொடர்ந்து, கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு தனிப்படை அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர்.