Good Bad Ugly: 2025 பொங்கலுக்கு களமிறங்கும் அஜித்தின் குட் பேட் அக்லி; படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

நீண்ட எதிர்பார்ப்புடன் களமிறங்கும் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம், பொங்கல் 2025 க்கு வெளியாகுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை படக்குழு போஸ்டராக வெளியிட்டு உறுதி செய்துள்ளது.

Good Bad Ugly 2024 Poster (Photo Credit: @Adhikravi X)

மே 20, சென்னை (Cinema News): திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran). மார்க் ஆண்டனியின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, ஆதிக் தற்போது நடிகர் அஜித் குமாருடன் குட் பேட் அக்லி (Good Bad Ugly) என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் 2025 பொங்கலுக்கு வெளியாகிறது. India Elections 2024 Phase 5: விறுவிறுப்புடன் தொடங்கியது ஐந்தாம்கட்ட வாக்குப்பதிவு; வாக்குச்சாவடி மையங்களில் பலத்த பாதுகாப்பு.! 

முதற்பார்வை போஸ்டர் வெளியீடு: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. அஜித் குமரின் 63வது திரைப்படமாக உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் முதற்பார்வை போஸ்டர் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement