Coolie Movie Update: கூலி படத்தில் இணைந்த பாலிவுட் ஸ்டார்.. வெறித்தனத்தில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்..!

நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படத்தில் நடிகர் அமீர் கான் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Rajinikanth | Aamir Khan (Photo Credit: @rajini_tamil X)

ஆகஸ்ட் 29, சென்னை (Cinema News): ரஜினிகாந்த் (Rajinikanth) தற்போது வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. கண்டிப்பாக சோஷியல் மெசேஜுடன் படம் உருவாகும் என்று ரஜினியின் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை முடித்துவிட்டு ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கிறார்.

கூலி: இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறது. இப்படத்திற்கும் அனிருத் இசையமைக்க உள்ளார். தலைவர் 171 படத்திற்கு கூலி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படம் குறித்த அப்டேட்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டு இருந்த நிலையில், படம் குறித்த அப்டேட்கள் இன்று முதல் அதாவது ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல், படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இப்படத்தில் மலையாள நடிகர் சவுபின் ஷாயிர் (Malayalam actor Soubin Shahir) நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Vishal on Sexual Harassments: உப்புமா கம்பெனிகளால் பாதிக்கப்படும் பெண்கள்; தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லை: விஷால் போட்டுடைத்த உண்மை.. முழு விபரம் உள்ளே.!

சவுபின் ஷாயிர்: மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் சவுபின் ஷாயிருக்கு இது முதல் தமிழ்ப் படம். போஸ்டரை பொறுத்தவரை சட்டை அணியாமல், வாயில் சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு, கையில் இருக்கும் வாட்சை பார்த்துக் கொண்டிருக்கிறார் சவுபின். அவர் கூலி படத்தில் தயாள் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என படக்குழு தெரிவித்துள்ளது.

பாலிவுட் ஸ்டார்: இந்நிலையில் ஹிந்தி நடிகர் அமீர் கான் (Actor Aamir Khan) கூலி படத்தில் ரஜினி உடன் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. 1995ல் ஆடங்க் ஹாய் ஆடங்க் (Aatank Hi Aatank) என்ற படத்தில் அமீர் கான் மற்றும் ரஜினி ஒன்றாக நடித்து இருந்தனர். கூலி படத்தில் அமீர் கான் நடிக்க ஒப்புக்கொண்டால் அவர்கள் 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிப்பது உறுதியாகும்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement