நவம்பர் 13, சென்னை (Cinema News): ஒவ்வொரு வாரமும் திரை ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், புதிய படங்கள் வாரத்தின் இறுதி நாளுக்கு முன்பு, அதாவது வெள்ளிக்கிழமை வெளியாகும். அந்த வகையில், நவம்பர் 14ம் தேதியான நாளை திரையரங்கம் மற்றும் ஓடிடி-யில் பல்வேறு படங்கள் வெளியாகின்றன. அது தொடர்பான விபரங்களை பின்வருமாறு விரிவாக பார்க்கலாம்.
டியூட் (Dude Movie Tamil):
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், தீபாவளி 2025க்கு வெளியாகி வெற்றிப்படமான டியூட், தற்போது வரை ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூலை பெற்றுள்ளது. இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் நெட்பிலிக்ஸ் ஓடிடியில் (Netflix New Added Movies November 2025) நவம்பர் 14ஆம் தேதி வெளியாகிறது. Bigg Boss Dinesh: பிக் பாஸ் தினேஷ் கைது.. நெல்லை காவல்துறை அதிரடி.. காரணம் என்ன?
ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் (Jurassic World Rebirth):
உலகளாவிய வரவேற்பு கொண்ட ஜுராசிக் வேர்ல்ட் படத்தின் ரீபர்த் படைப்பு 2025 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படமாகும். இப்படம் நவம்பர் 14ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.
காந்தா (Kaantha Tamil Tamil Movie):
நடிகர்கள் துல்கர் சல்மான், ரானா டகுபதி உட்பட பலர் முக்கிய இடத்தில் நடித்து உருவாகியுள்ள படம் காந்தா. பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடா என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 14ல் திரையில் வருகிறது.
தி கேர்ள் பிரண்ட் (The Girl Friend Tamil Movie):
நடிகை ராஷ்மிகா மந்தனா பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து வந்த நிலையில், தி கேர்ள் பிரண்ட் படத்தின் மூலமாக தனித்துவமாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் தீக்ஷித் ஷெட்டி கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நவம்பர் 14ல் திரையரங்கில் வெளியாகிறது.
கும்கி 2 (Kumki 2 Tamil Movie):
இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய அளவில் வெற்றி படமான கும்கி படத்தின் இரண்டாவது பாகம் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து வெளியாகிறது. இப்படத்தில் அர்ஜுன் தாஸ், மதியழகன் உட்பட பலரும் நடித்துள்ளனர். படம் நவம்பர் 14 முதல் திரையரங்கில் வெளியாகிறது.